இந்த ஒரு மாவட்டத்தை தவிர.. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 100க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 610 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு மாவட்டத்தைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தினசரி பாதிப்பு 100க்கு கீழாக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினமும் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஒரு மாவட்டத்தைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு 100க்கு கீழ் சரிந்துள்ளது.

 தினசரி கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் மொத்தம் 1.01 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் பிரிட்டன் நாட்டில் இருந்து திரும்பிய 2 பேர் உட்பட மொத்தம் 610 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 27,39,806 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 0.6%ஆக உள்ளது. கோவை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் பாசிட்டிவ் விகிதம் 1.1%ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 0.8%ஆக உள்ளது.

 கொரோனா உயிரிழப்புகள்

கொரோனா உயிரிழப்புகள்

அதேபோல தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 4 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தனியார் மருத்துவமனைகளிலும் 3 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். கோவை, சேலம், தஞ்சை, தேனி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,680 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

 ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

புதிய வைரஸ் பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் குறைகிறது. நேற்று 7,346ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 7,270ஆக குறைந்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 682 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,95,856 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

 மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட ரீதியான பாதிப்பில் தலைநகர் சென்னையில் 129 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் இல்லை. கோவையில் 98 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அரியலூர், விருதுநகர் மாவட்டங்களில் ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதேபோல மாநிலத்தில் மொத்தம் 24மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 10க்கு கீழ் குறைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+