நிம்மதி! 23 மாவட்டங்களில் 10க்கும் கீழ் குறைந்த கொரோனா.. ஆக்டிவ் கேஸ்களும் 7500க்கு கீழ் சரிந்தது
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 627 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் 7500க்கு கீழாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. பண்டிகை காலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என முதலில் அஞ்சப்பட்டது.
இருப்பினும், நல்வாய்ப்பாக கொரோனா கேஸ்கல் தொடர்ந்து குறைந்தே வருகிறது. மாநிலத்தில் தற்போது தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் மொத்தம் 1.04 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் மொத்தம் 627 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 27,37,962 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 0.6%ஆக உள்ளது. அதிகபட்சமாகக் கோவை மாவட்டத்தில் பாசிட்டிவ் விகிதம் 1.2%ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 0.9%ஆக உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
அதேபோல தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 8 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகச் சேலத்தில் 3 பேரும் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,656 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
புதிய வைரஸ் பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் குறைகிறது. நேற்று 7,548ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை பல நாட்களுக்குப் பிறகு இன்று 7500க்கு கீழ் குறைந்துள்ளது. தற்போது மாநிலத்தில் மொத்தம் 7,476 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 687 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,93,830 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட ரீதியான பாதிப்பில் சென்னையில் 124 பேருக்கும் கோவையில் 104 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 2 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் இல்லை. அதேபோல அரியலூர், கடலூர் உட்பட மொத்தம் 23 மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 10க்கு கீழ் குறைந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications