23 மாவட்டங்களில் 10க்கும் கீழ் குறைந்த கொரோனா.. ஆக்டிவ் கேஸ்களும் 8200க்கு கீழ் சரிந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 715 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 8200க்கு கீழாகக் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல மத்திய அரசும் ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா கொரோனா கட்டுப்பாடுகளை இந்தாண்டு இறுதி வரை நீட்டித்துள்ளது.

இருப்பினும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களும் 8200க்கு கீழ் சென்றுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் மொத்தம் 1.01 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து திரும்பிய தலா ஒருவர் உட்பட மொத்தம் 715 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 27,28,350 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 0.7%ஆகத் தொடர்கிறது. அதிகபட்சமாகச் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாசிட்டிவ் விகிதம் 1.5%ஆக உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்

கொரோனா உயிரிழப்புகள்


அதேபோல தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 7 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகக் கோவையில் 3 பேரும் சென்னை, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,504 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

புதிய வைரஸ் பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் குறைகிறது. நேற்று 8,200ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று மேலும் குறைந்து 8,155ஆக உள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 748 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,83,691 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட ரீதியான பாதிப்பில் சென்னையில் 123 பேருக்கும் கோவையில் 121 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 0.9%ஆகவும் கோவையில் 1.4% ஆகவும் உள்ளது. இந்த 2 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் இல்லை. அதேபோல அரியலூர், கடலூர் உட்பட மொத்தம் 23 மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 10க்கு கீழ் குறைந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் யாருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+