இன்று 740 பேருக்கு கொரோனா பாதிப்பு.. இந்த 2 மாவட்டங்களில் மட்டும் 100+ வைரஸ் பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இன்றைய தினம் 740 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 8,382ஆகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது நவ. 30ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
முதலில் பண்டிகை காலத்தில் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என அஞ்சப்பட்டது. இருப்பினும், வேக்சின் பணிகள், கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றியது ஆகியவற்றால் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1.01 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அவர்களில் மொத்தம் 740 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 27,24,731 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 0.7%ஆக தொடர்கிறது. அதிகபட்சமாகச் சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 1.5%ஆக உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 7 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,454 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
புதிய கொரோனா கேஸ்கள் குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 8,418ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 8,382ஆகக் குறைந்துள்ளது மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 765 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,79,895
பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட ரீதியான பாதிப்பில் சென்னையில் 105 பேருக்கும் கோவையில் 112 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 0.8%ஆகவும் கோவையில் 1.4% ஆகவும் உள்ளது. இந்த 2 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் இல்லை. அதேபோல தமிழ்நாட்டில் உள்ள 24 மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 10க்கு கீழ் குறைந்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications