20 மாவட்டங்களில் 10க்கு கீழ் குறைந்த கொரோனா.. 2 மாவட்டங்களில் யாருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று மாநிலத்தில் 730 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. ஊரடங்கு தளர்வுகள் காரணமாக எங்கு வைரஸ் பாதிப்பு அதிகரிக்குமோ என முதலில் அஞ்சப்பட்டது. இருப்பினும் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அவர்களில் மொத்தம் 730 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 27,26,197 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 0.7%ஆகத் தொடர்கிறது. அதிகபட்சமாகச் செங்கல்பட்டு, திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 1.4%ஆக உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 5 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகத் தலைநகர் சென்னையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,472 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
நேற்று 8,337ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 8,291ஆகக் குறைந்துள்ளது மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 767 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,81,434 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட ரீதியான பாதிப்பில் சென்னையில் 105 பேருக்கும் கோவையில் 106 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 0.9%ஆகவும் கோவையில் 1.3% ஆகவும் உள்ளது. இந்த 2 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் இல்லை. அதேபோல தமிழ்நாட்டில் உள்ள 20 மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 10க்கு கீழ் குறைந்துள்ளது. குறிப்பாகத் தென்காசி, தேனி மாவட்டங்களில் யாருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை.மாவட்ட ரீதியான பாதிப்பில் சென்னையில் 105 பேருக்கும் கோவையில் 106 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 0.9%ஆகவும் கோவையில் 1.3% ஆகவும் உள்ளது. இந்த 2 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் இல்லை. அதேபோல தமிழ்நாட்டில் உள்ள 20 மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 10க்கு கீழ் குறைந்துள்ளது. குறிப்பாகத் தென்காசி, தேனி மாவட்டங்களில் யாருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை.












Click it and Unblock the Notifications