படுவேகமாக குறையும் கொரோனா.. 27 மாவட்டங்களில் 10க்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 439 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் ஒருவர் மட்டுமே கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் பரவல் காரணமாக 3ஆம் அலை ஏற்பட்டதன் காரணமாகத் தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரித்தது.
குறிப்பாக அந்த சமயத்தில் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டியது. கடந்த ஜன. 22ஆம் தேதி உச்சம் தொட்ட 3ஆம் அலை அதன் பின்னர் அப்படியே குறையத் தொடங்கியது.

தினசரி பாதிப்பு
இப்போது மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் மொத்தம் 439 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனா கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 34,49,007ஆக உயர்ந்துள்ளது. அதேபோல மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் இப்போது 0.80% ஆக உள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
தமிழகத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படுவேகமாக குறைந்து வருகிறது. நேற்றைய தினம் 7,164 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது 6,393ஆக குறைந்துள்ளது.மேலும் இன்று ஒரே நாளில் மொத்தம் 1,209 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,04,611ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு
ஓமிக்ரான் சமயத்தில் 50 வரை சென்ற கொரோனா உயிரிழப்பு, கடந்த சில வாரங்களாகவே ஒற்றை இலக்கத்திலேயே பதிவாகி வருகிறது. நேற்று இருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இன்று அது ஒன்றாகக் குறைந்துள்ளது. நாகையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு கொரோனா நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,003ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு
இன்று தலைநகர் சென்னையில் 119 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கோவையில் தினசரி பாதிப்பு 66 பேருக்கும் செங்கல்பட்டில் 51 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களைத் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் தினசரி பாதிப்பு 50ஐ தாண்டவில்லை. தமிழகத்தில் மொத்தம் 27 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 10க்கு கீழ் குறைந்துள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications