மின்னல் வேகத்தில் குறையும் கொரோனா!தமிழகத்தில் தினசரி பாதிப்பு 12 ஆயிரத்திற்குக் கீழ் சென்றது
சென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று 11,993 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த டிச. மாதம் பரவ தொடங்கிய ஓமிக்ரான் மெல்ல வேகமெடுத்தது. இதனால் ஏற்பட்ட 3ஆம் அலை காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது.
தற்போது வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் சூழலில் பிப். 1 முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது தினசரி வைரஸ் பாதிப்பு 12 ஆயிரத்திற்குக் கீழ் சென்றுள்ளது.

தினசரி பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 1.30 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 8 பேர் உட்பட 11,993 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,87,322ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் சென்னை
மாவட்ட ரீதியிலான கொரோனா பாதிப்பில் இப்போதும் தலைநகர் சென்னையில் அதிகமாக உள்ளது. இருப்பினும், தலைநகர் பல நாட்களுக்குப் பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு 2000க்கு கீழ் குறைந்துள்ளது. இன்று சென்னையில் 1751பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. ஒரு கட்டத்தில் 30% வரை சென்ற பாசிட்டிவ் விகிதம் இப்போது வெறும் 8.7%ஆகக் குறைந்துள்ளது.

உயிரிழப்பு
இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 12 தனியார் மருத்துவமனைகளிலும் 18 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்களாகும். அதிகபட்சமாகச் சென்னையில் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல கோவை மற்றும் திருச்சியில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 37,666 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல ஆக்டிவ் கேஸ்களும் மாநிலத்தில் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 1,77,999ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் இன்று 1,66,878ஆக குறைந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 23,084 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 31,82,778ஆக உயர்ந்துள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications