சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு - மார்ச் 22 முதல் 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மார்ச் 22-ந் தேதி முதல் 9,10 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. அதேபோல் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 Tamilnadu Coronavirus: Schools for 9,10,11 will colse from March 22

மேலும் தஞ்சாவூர், திருச்சியில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் தமிழக அரசு உடனடியாக பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இந்த நிலையில் வரும் 22-ந் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை 9,10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறது; இந்த மாணவ்வர்களுக்கான விடுதிகளும் மூடப்படுகின்றன.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இணையவழி டிஜிட்டல் கற்பித்தல் முறை தொடர்ந்து நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அரசாணை விவரம்:

English summary
Tamil Nadu govt said that Schools shall be closed for std 9, 10 & 11 with effect from 22nd March until further orders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X