தமிழகத்தில் ஒரே நாளில் 959 சிறார்களுக்கு கொரோனா.. 30,000 ஆயிரத்தை நெருங்கும் தினசரி பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 959 சிறார்கள் உட்பட புதிதாக 28,978 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த மாநில அரசு இன்று முதல் வரும் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்துள்ளன. இதன் காரணமாக வரும் நாட்களில் வைரஸ் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கபடுகிறது.

 30 ஆயிரத்தை நெருங்கும் தினசரி பாதிப்பு

30 ஆயிரத்தை நெருங்கும் தினசரி பாதிப்பு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல உயர்ந்து 30ஆயிரத்தை நெருங்குகிறது. கடந்த 24 மணி நேரத்தில் வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய 11 பேர் உட்பட 28,978 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 959 பேர் 12 வயதுக்கு உட்பட சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 கொரோனா உயிரிழப்பு

கொரோனா உயிரிழப்பு

அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 232 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 134 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 98 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். அவர்களில் எவ்வித இணை நோய்கள் இல்லாதவர்கள் 58 பேர் ஆகும். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,880 ஆக உயர்ந்துள்ளது.

 ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

தமிழகத்தில் தற்போது சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,52,389ஆக அதிகரித்துள்ளது. மறுபுறம் ஒரே நாளில் கொரோனாவில் இருந்கு 20,904 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக தற்போது வரை 12,40,968 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வாரியாக பாதிப்பு

தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு மிக மிக மோசமாக உள்ளது. சென்னையில் தொடர்ந்து 2ஆவது நாளாக தினசரி வைரஸ் பாதிப்பு 7000ஐ கடந்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 7149 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 67 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதேபோல செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு 2000ஐ கடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+