இன்று 2775 பேருக்கு மட்டுமே கொரோனா.. ஆனால் இந்த 2 மாவட்டங்களில் 200 மேல் சென்ற வைரஸ் பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று 2775 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன் தினசரி வைரஸ் பாதிப்பு 30 ஆயிரம் வரை சென்றது. இதனால் மாநிலத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளால் நிரம்பத் தொடங்கினர்,
இதையடுத்து மாநிலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னரே கொரோனா 2ஆம் அலை மெல்லக் கட்டுக்குள் வரத் தொடங்கியது.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு இன்றும் தொடர்ந்து 51ஆவது நாளாகக் குறைந்துள்ளது. இன்று மாநிலத்தில் மொத்தம் 1.48 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 12 வயதுக்குக் கீழ் உள்ள 123 சிறார்கள் உள்பட மொத்தம் 2,775 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
நேற்று கொரோனாவால் 49 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இன்று கொரோனா உயிரிழப்பு 47ஆகக் குறைந்துள்ளது. இணை நோய் இல்லாத 9 பேரும், 50 வயதுக்குக் குறைவான 8 பேரும் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 32 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 15 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதுவரை தமிழ்நாட்டில் 33,418 கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல கொரோனாவால் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 32,307ஆக உள்ளது. மேலும், இன்று மட்டும் 3,188 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை 24,53,061 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு
தினசரி கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு இன்று 298 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தஞ்சையில் 210 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு 200க்கு மேல் உள்ளது. இவை தவிர ஈரோட்டில் 198 பேருக்கும் சென்னையில் 171 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு (144), சேலம் (175), திருப்பூர் (163), திருச்சி (108) ஆகிய மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் உள்ளது
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications