தமிழகத்தில் தொடர்ந்து குறையும் ஆக்டிவ் கேஸ்கள்.. இந்த 3 மாவட்டங்களில் மட்டும் 100+ கொரோனா பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் மாநிலத்தில் தொடர்ந்து குறைந்து 16,620ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கிற்குப் பிறகு கடந்த மே மாதம் முதல் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இடையில் கடந்த ஜூலை மாதம் வைரஸ் பாதிப்பு சற்று அதிகரிக்கத் தொடக்கியது. உடனடியாக சுதாகரித்துக் கொண்ட மாநில அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதையடுத்து வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள்ளேயே இருந்தது. தமிழ்நாட்டில் தற்போது செப். 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 1,54,718 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ஐக்கிய அமீரகத்தில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட மொத்தம் 1508 பேருக்கு இன்று வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை 26,16,381 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் எங்கு வைரஸ் பாதிப்பு அதிகரிக்குமோ என அஞ்சப்பட்டது. இருப்பினும், வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள்ளேயே இருந்து வருகிறது சற்றே ஆறுதல் தரும் விஷயமாகும்.

பாசிட்டிவ் விகிதம்
அதேபோல பாசிட்டிவ் விகிதமும் 1 என்ற அளவிலேயே தொடர்கிறது. அதிகபட்சமாகத் தஞ்சையில் பாசிட்டிவ் விகிதம் 2ஆக உள்ளது. கோவையில் 1.6ஆகவும் மயிலாடுதுறையில் 1.7ஆகவும் பாசிட்டிவ் விகிதம் உள்ளது. தலைநகர் சென்னையில் மாநில சராசரியைவிடக் குறைவாக 0.8%ஆகவே பாசிட்டிவ் விகிதம் உள்ளது. இவை தவிர அரியலூர், செங்கல்பட்டு, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவாரூர், திருப்பூர் திருச்சி ஆகிய மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாசிட்டிவ் விகிதம் மாநில சராசரியைவிட அதிகமாக உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
அதேபோல மாநிலத்தில் ஒரே நாளில் 20 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 14 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இன்று உயிரிழந்தவர்களில் ஒருவர் எவ்வித இணை நோய்களையும் கொண்டிருக்காதவர்கள், 2 பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள் ஆகும். அதிகபட்சமாக இன்று கடலூரில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 34,941 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
ஆக்டிவ் கேஸ்களை பொறுத்தவரை நேற்று மாநிலத்தில் 16,850 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது 16,620ஆகக் குறைந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 1,719 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், இதுவரை 25,64,820 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வாரியான பாதிப்பில் இன்று கோவையில் தான் அதிகமாக உள்ளது. அங்கு இன்று 186 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல தலைநகர் சென்னையில் 177 பேருக்கும் ஈரோட்டில் 137 பேருக்கும்வைர்ஸ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் மட்டுமே வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications