குட் நியூஸ்..! தமிழகத்தில் 30,000 கீழ் சென்ற ஆக்டிவ் கேஸ்கள்.. தினசரி பாதிப்பு 55ஆவது நாளாக குறைவு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 2405 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் பல மாதங்களுக்குப் பிறகு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
த
மிழ்நாட்டில் 2ஆம் அலையைக் கட்டுப்படுத்த கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கிற்குப் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியது.
தமிழ்நாட்டில் தற்போது ஜூலை 19ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தினசரி கொரோனா பாதிப்பு
இந்நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து 55ஆவது நாளாக இன்றும் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. இன்று மொத்தம் 1.46 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட மொத்தம் 2405 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று மாநிலத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 110 சிறார்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 25,28,806 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
கடந்த சில நாட்களாக மாநிலத்தில் அதிகரித்த உயிரிழப்புகள் இன்று குறைந்துள்ளது. நேற்று 55 பேர் கொரோனாவால் உயிரிழந்திருந்த நிலையில், இன்று கொரோனா உயிரிழப்பு 49ஆகக் குறைந்துள்ளது. அவர்களில் 11 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 38 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களாகும்.
இன்று உயிரிழந்தவர்களில் 13 பேர் எவ்வித இணை நோயும் இல்லாதவர்கள். தமிழ்நாட்டில் இதுவரை 33,606 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல பல மாதங்களுக்குப் பிறகு மாநிலத்தில் ஆக்டிவ் கேஸ்கள் 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. தற்போது மாநிலத்தில் 29,950 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று மட்டும் 3,006 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது வரை 24,65,250 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு
இன்று கோவை மாவட்டத்தில் 256 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தஞ்சையில் 163 பேருக்கும் ஈரோட்டில் 159 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சென்னை (148), செங்கல்பட்டு (130), சேலம் (155), திருப்பூர் (143) ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் உள்ளது.












Click it and Unblock the Notifications