தமிழகத்தில் தொடர்ந்து 4ஆவது நாளாக உயரும் கொரோனா.. அதேநேரம் 23 மாவட்டங்களில் உயிரிழப்புகள் இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நான்காவது நாளாக இன்று வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மாநிலத்தில் இன்று மொத்தம் 1990 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

Recommended Video

    கொரோனா மீண்டும் அதிகரிப்பது ஏன் | Dr. Shanthi Ravindranath Explain | Oneindia Tamil

    தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சில இடங்களில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட கடந்த மே மாதம் தொடங்கி 68 நாட்கள் தொடர்ந்து குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த நான்கு நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.

    தினசரி கொரோனா பாதிப்பு

    தினசரி கொரோனா பாதிப்பு

    தமிழ்நாட்டில் நேற்று 1986 கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 1990 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 1.58 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய இருவர் உட்பட மொத்தம்1990 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 118 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆகும். இதுவரை தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 25,61,587 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா உயிரிழப்புகள்

    கொரோனா உயிரிழப்புகள்

    அதேபோல இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 26 பேர் மட்டுமே கொரோனாவால் பலியாகியுள்ளனர். அவர்களில் 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 20 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களாகும். இன்று உயிரிழந்தவர்களில் 4 பேர் எவ்வித இணை நோயும் இல்லாதவர்கள், 7 பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள் ஆகும். தமிழ்நாட்டில் இதுவரை 34,102 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

    ஆக்டிவ் கேஸ்கள்

    ஆக்டிவ் கேஸ்கள்

    தமிழ்நாட்டில் இப்போது 20,524 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 2,156 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 25,06,961 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். பாசிட்டிவ் கேஸ்களை பொறுத்த வரை தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் தான் அதிகமாக உள்ளது. தஞ்சையில் அதிகபட்சமாக பாசிட்டிவ் விகிதம் 3.1% ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.2% ஆக உள்ளது.

    மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு

    மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு

    மாவட்ட வாரியான பாதிப்பு என எடுத்துக் கொண்டால் இன்றும் கோவையில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இன்றும் கோவையில் 230 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் நேற்று 204 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று வைரஸ் பாதிப்பு 175ஆகக் குறைந்துள்ளது. இவை தவிரச் செங்கல்பட்டு (133), ஈரோடு (180), தஞ்சை (126) ஆகிய மாவட்டங்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் உள்ளது.

    23 மாவட்டங்களில் உயரும் கொரோனா

    23 மாவட்டங்களில் உயரும் கொரோனா

    நேற்றைய வைரஸ் பாதிப்புடன் ஒப்பிடுகையில் இன்று 19 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாகத் திருப்பூரில் 5 பேரும், சேலத்தில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் சென்னை, ஈரோடு உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்று ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+