55 வயசாய்ருச்சா.. திமுகவில் இருக்கீங்களா.. பேசாம பாஜகவுக்கு வந்துருங்க.. கு. க. செல்வம் அறைகூவல்!
சென்னை: 55 வயசாகியும் இன்னும் திமுகவில் இருக்கிறீர்களா, பேசாமல் அதிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து விடுங்கள் என கு. க. செல்வம் அறைகூவல் விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளவர் கு.க. செல்வம். இவர் திமுகவின் தலைமை நிலைய அலுவலக செயலாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் திமுகவில் அண்மையில் நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றது.
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த ஜெ அன்பழகன் கடந்த ஜூன் 10-ஆம் தேதி கொரோனாவால் உயிரிழந்தார். அதனால் அந்த பதவியை தமக்கு வழங்குமாறு தலைமையிடம் கேட்டார்.

பாஜக தலைவர்
ஆனால் இவருக்கு பதிலாக அந்த பதவி வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனால் அதிருப்தி அடைந்த கு க செல்வம் பாஜகவில் செல்ல முடிவு செய்திருந்தார். அதற்காக அவர் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார். இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செல்வம் நடந்து கொண்டது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

பொறுப்பு
இந்த நிலையில் தமிழக பாஜக தலைமையிடமான கமலாலயத்தில் உள்ள பாஜக மூத்த நிர்வாகிகளை சந்தித்த கு. க. செல்வம் செய்தியாளர்களையும் சந்தித்தார். அவர் கூறுகையில் என்னை திமுகவிலிருந்து நீக்குவதென்றால் நீக்கிக் கொள்ளட்டும். திமுகவில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கேட்டேன்.

திமுக
இப்போது உதயநிதி சொல்வதை கேட்கும் நிலை திமுகவில் உள்ளது. 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் திமுகவில் இருக்காதீர்கள். எனக்கு ஏற்பட்ட நிலை நாளை உங்களுக்கும் ஏற்படலாம். அதனால் எல்லோரும் பாஜகவில் வந்து சேருங்கள் என அறைகூவல் விடுத்துள்ள கு.க செல்வம் இதுவரை பாஜகவில் இணைந்தாரா இல்லையா என தெரியவில்லை.

செல்வம் நீக்கப்பட்டார்
இந்த நிலையில் திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் தான் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications