கொத்துக் கொத்தாய் தலைவர்கள்.. இதுவரை இல்லாத களேபரங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக அரசியல் வரலாற்றில் 1984 க்கு பிறகு ஆண்ட கட்சியை மீண்டும் ஆட்சியை கைப்பற்றி, பதவிக்காலத்தை முழுவதுமாக நிறைவு செய்தது கிடையாது. 2016 ல் இதனை முறியடித்த அதிமுக, 5 ஆண்டு காலை ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்புடன் இந்த முறை களமிறங்கி உள்ளது.

அதேசமயம் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக, இந்த முறை ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற முனைப்புடன் களம் காண்கிறது. 2016 ல் பெற்ற 89 சீட்களை விட கூடுதல் இடங்களை பெறுவதற்காக பல கட்சிகளை ஒன்றிணைத்து மெகா கூட்டணி அமைத்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு 61 சீட்களை ஒதுக்கிய திமுக, 173 இடங்களில் போட்டியிட உள்ளது. இதில் 100 க்கும் அதிகமான இடங்களில் அதிமுக.,வுடன் நேருக்கு நேர் மோத உள்ளது.

அதிகமான கட்சிகள் போட்டியிடும் இந்த தேர்தலில் பல முக்கிய வேட்பாளர்கள் களமிறங்குவதால், அந்த தொகுதிகள் விஐபி தொகுதிகளாக மாறி உள்ளன. முக்கிய வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

எழிலன்

எழிலன்

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆஸ்தான டாக்டராக இருந்த எழிலன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஆயிரம் விளக்கு தொகுதி, இதற்கு முன் 4 முறை ஸ்டாலின் வெற்றி பெற்ற தொகுதி. அதிக முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட இந்த தொகுதி, திமுக.,வின் பலம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது.

குஷ்பூ

குஷ்பூ

எழிலனை எதிர்த்து அதிமுக வேட்பாளருக்கு பதிலாக, பாஜக., வேட்பாளர் குஷ்பூ சுந்தர் களமிறக்கப்பட்டுள்ளார். நடிகை குஷ்பூ, முதலில் திமுக.,வில் இருந்து பிறகு காங்கிரசில் இணைந்து, தற்போது பாஜக.,வில் இணைந்தவர். இவர் முதல் முறையாக போட்டியிடும் தேர்தல் இது. குஷ்பூவிற்கு அதிக அளவில் ரசிகர்கள் இருப்பதால் அவரால் எளிதில் வெற்றி பெற முடியும் என பாஜக நம்புகிறது.

கமலஹாசன்

கமலஹாசன்

திமுக, அதிமுக.,விற்கு மாற்றாக வந்துள்ளதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் இவர் திமுக அல்லது அதிமுக வேட்பாளர்களை எதிர் கொள்ளாமல் பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்கொள்ள உள்ளார்.

 வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

கமலை எதிர்த்து கோவை தெற்கு தொகுதியில் பாஜக.,வின் வானதி சீனிவாசன் களமிறக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர் பயிற்சி பெற்ற இவர், 1993 முதல் பாஜக.,வில் இருந்து வருகிறார். இதற்கு முன் 2016 சட்டசபை தேர்தலில், இதே தொகுதியில் போட்டியிட்டு அதிமுக.,வின் அம்மன் அர்ஜூனனிடம் தோற்றார்.

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

2011 முதல் கொளத்தூர் எம்எல்ஏ.,வாக இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் 3வது முறையாக அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் என்ற அடையாளத்துடன் 1989 ல் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் சென்னை மேயராகவும், கருணாநிதி ஆட்சி காலத்தில் துணை முதல்வராகவும் இருந்தவர். தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ஸ்டாலின், திமுக- காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் முதல் முறையாக முதல்வராக வாய்ப்புள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

தற்போதைய முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் 7 முறை போட்டியிட்டு, அதில் 4 முறை வெற்றி பெற்றவர். 2016 ல் இந்த தொகுதியில் 85.5 சதவீதத்திற்கு அதிகமான ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து திமுக.,வில் 37 வயதாகும் சம்பத் குமார் போட்டியிடுகிறார். இதனால் மற்றொரு பிரம்மாண்ட வெற்றியை முதல்வர் இந்தமுறையும் பெறுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 2001 ம் ஆண்டு முதல் இவர் இந்த தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று வருகிறார். இந்த முறை ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து, அதிமுக.,வில் இருந்து அமமுக.,விற்கு சென்று பிறகு திமுக.,வில் இணைந்த தங்க தமிழ்ச்சசெல்வன் போட்டியிடுகிறார். தெற்கில் திமுக.,விற்கு பலமான தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார். ஓபிஎஸ் பலத்துடன் ஒப்பிடுகையில் தங்க தமிழ்ச்செல்வனின் செல்வாக்கு குறைவு என்பதால் இந்த முறையும் ஓபிஎஸ் மாபெரும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன், அமமுக என்ற கட்சியை துவக்கி நடத்தி வருகிறார். இவர் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து போட்டியிடுகிறார். அமமுக., இந்த முறை ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி மற்றும், விஜயகாந்த்தின் தேமுதிக.,வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. திமுக, அதிமுக கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கவே இவர் தேர்தலில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+