ஆரம்பமே அசத்தல்.. ஸ்டாலினுக்கு போன சிபாரிசு.. கையில் இருக்கும் "அந்த" லிஸ்ட்.. இன்றே தெரிந்துவிடும்?
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை சந்தித்து இன்று திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். ஆளுநர் மாளிகை செல்லும் ஸ்டாலின், கையில் புதிய தமிழக அமைச்சர்களின் பட்டியலையும் கொண்டு செல்ல இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தலில் வென்றுள்ள திமுக கூட்டணி அரசு வரும் வெள்ளிக்கிழமை ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். 10 ஆண்டு போராட்டத்திற்கு பின் திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது.
திமுக ஆட்சி அமைக்க உள்ள நிலையில் யாருக்கு எல்லாம் அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாகவும், புதிராகவும் உள்ளது.

அமைச்சர்
இந்த நிலையில் இன்று எம்எல்ஏக்களின் ஆதரவு கடித்ததோடு ஆளுநரை சந்திக்க செல்லும் ஸ்டாலின், தன்னுடன் புதிய அமைச்சர்களின் பட்டியலையும் கொண்டு செல்ல இருக்கிறார். வெள்ளிக்கிழமை அமைச்சர்களாக பதவி ஏற்க போகும் எம்எல்ஏக்களின் பட்டியலை ஸ்டாலின் கொண்டு செல்ல உள்ளார்.

லிஸ்ட்
ஸ்டாலின் உருவாக்கி இருக்கும் இந்த பட்டியலில் சுகாதாரத்துறை உட்பட முக்கியமான சில துறைகள் மட்டுமே உள்ளன. மொத்தமாக அனைத்து துறைகளுக்குமான அமைச்சர்கள் நாளை பதவி ஏற்க வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வருகின்றன. முதல் கட்டமாக ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே நாளை பதவி ஏற்க இருக்கிறார்கள். முக்கியமான சில எம்எல்ஏக்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

எப்படி
இதற்கான லிஸ்டை கிட்டத்தட்ட நீண்ட ஆலோசனைக்கு பின்பே ஸ்டாலின் உருவாக்கி இருக்கிறார். தேர்தல் முடிந்த உடனேயே இந்த லிஸ்டை தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டதால், தேர்தல் முடிவிற்கு பின் அதில் பெரிய மாற்றங்களை செய்யவில்லை என்கிறார்கள். கூட்டணி கட்சிகளுக்கு முதல் கட்ட அமைச்சரவை லிஸ்டில் வாய்ப்பு இருக்குமா என்பது சந்தேகம்தான்.

அமைச்சரவை
ஆனால் கண்டிப்பாக கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் இருக்கும், இப்போது பெயர் இல்லை என்றாலும் விரிவாக்கத்தில் சேர்க்கப்படும் என்று கூறுகிறார்கள். இன்று ஆளுநரிடம் ஸ்டாலின் தனது அமைச்சரவை லிஸ்டை கொடுத்த பிறகு, அது குறித்து முழு விவரங்கள் வெளியாகும் என்கிறார்கள். தற்போது உருவாக்கப்பட்டு இருக்கும் சிறிய அமைச்சரவையில் சில மூத்த எம்எல்ஏக்கள், சில இளம் புது முகங்கள், பெண்கள் என்று கலவையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

கிட்சன் கேபினட்
இதில் ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமான சிலருக்கும், முக்கிய தலைவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் வாய்ப்பு கண்டிப்பாக கொடுக்கப்படும் என்கிறார்கள். உதயநிதிக்கு அமைச்சரவை கிடைக்கும் என்று தகவல்கள் வந்தாலும், இன்று கொடுக்கப்பட உள்ள லிஸ்டில் அவரின் பெயர் இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். கண்டிப்பாக இந்த லிஸ்ட் அதிரடியான, கலவையான லிஸ்ட்டாக இருக்கும் என்றே கூறுகிறார்கள்.

பார்க்கலாம்
சில சிபாரிஸுகள் காரணமாக எதிர்பார்க்காத சில எம்எல்ஏக்கள் கூட இந்த லிஸ்டில் இடம்பெற்று இருப்பதாக தகவல்கள் வருகின்றன.ஆனாலும் இது முதல் கட்ட லிஸ்ட் என்பதால் முழு அமைச்சரவை விரிவாக்கம் சில வாரங்களுக்கு பின்பே நடக்கும் என்கிறார்கள். ஆளுனரிடம் ஸ்டாலின் கொடுக்க போகும் இந்த லிஸ்ட் இப்போதே திமுகவிற்குள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications