சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

29 லட்சம் வாக்குகள்.. அடித்து துவைத்த "நம்பர் 3" நாம் தமிழர்.. சர்ப்ரைஸ் தந்த பாமக.. முழு விபரம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் எவ்வளவு என்ன விவரங்கள் வெளியாகி உள்ளன. திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

Recommended Video

    விஸ்வரூபம் எடுக்கும் நாம் தமிழர் கட்சி... 3-வது கட்சியாக உருவெடுப்பதால் கலகலக்கும் மற்ற கட்சிகள்!

    தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி உள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களில் வென்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது. 125 இடங்களில் வென்று திமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

    அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் வெற்றிபெற்ற வாக்குகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    நான்தான் படிச்சிபடிச்சி சொன்னேன் கமல்.. நான் எப்படி எஸ் ஆனேன் பாத்தியா! ரஜினியை பங்கம் செய்த மீம்ஸ்!நான்தான் படிச்சிபடிச்சி சொன்னேன் கமல்.. நான் எப்படி எஸ் ஆனேன் பாத்தியா! ரஜினியை பங்கம் செய்த மீம்ஸ்!

     வாக்கு சதவிகிதம்

    வாக்கு சதவிகிதம்

    தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெற்று வாக்கு சதவிகிதம் பின்வருமாறு

    • திமுக - 37.15%
    • அதிமுக - 33.28%
    • காங்கிரஸ் - 4.28%
    • மக்கள் நீதி மய்யம் 2.4%
    • நாம் தமிழர் கட்சி 6.6%
    • அமமுக 2.4%
    • பாட்டாளி மக்கள் கட்சி - 3.81%
    • இந்திய கம்யூனிஸ்ட் - 1.09%
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 0.85%
    • தேமுதிக - 0.43%
    • பாஜக - 2.63%
    • விசிக- 1.3%
    • முஸ்லிம் லீக்- 0.48%
     வாக்கு எண்ணிக்கை

    வாக்கு எண்ணிக்கை

    தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை

    • திமுக - 15685421
    • அதிமுக - 14385410
    • நாம் தமிழர் - 2958458
    • காங்கிரஸ் - 1906578
    • பாட்டாளி மக்கள் கட்சி -1745229
    • பாஜக -1180456
    • அமமுக -1065142
    • மக்கள் நீதி மய்யம் -1058847
    • இந்திய கம்யூனிஸ்ட் - 504037
    • மதிமுக -486979
    • விசிக -457763
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 390819
    • கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி - 339342
    • ஐயுஎம்எல் -222263
    • தமிழ் மாநில காங்கிரஸ் -221051
    • தேமுதிக -195610
    • தமிழக மக்கள் ஜனநாயக கட்சி -22156
    • சமத்துவ மக்கள் கட்சி -89220
    • இந்திய ஜனநாயக கட்சி - 39288
     நாம் தமிழர் வாக்குகள்

    நாம் தமிழர் வாக்குகள்

    இந்த சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 234 தொகுதிகளில் சிறப்பாக செயலாற்றி உள்ளது. திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக மிக அதிகமாக 2958458 வாக்குகளை பெற்று நாம் தமிழர் அசத்தி உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் இந்த முறையும் கூட்டணியே இல்லாமல் போட்டியிட்டு அதிக அளவில் வாக்குகளை வென்றுள்ளது.

     மற்ற கட்சிகள்

    மற்ற கட்சிகள்

    தமிழகத்தில் கூட்டணியே இல்லாமல் நம்பர் 3 கட்சியாக நாம் தமிழர் உருவெடுத்துள்ளது. மற்ற எந்த கட்சியும் நாம் தமிழர் அருகில் கூட வரவில்லை. அடுத்தடுத்தபடியாக வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படியில் காங்கிரஸ் - 1906578, பாமக - 1745229 அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. அதிசயமாக பாஜக 1180456 வாக்குகளை பெற்றுள்ளது. அமமுக, மநீமவை விட பாஜக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

    English summary
    Tamilnadu election result 2021: Total votes got by NTK, PMK, DMK, AIADMK and all other parties in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X