• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திமுக, அதிமுக பெற்ற வாக்குசதவிகிதம் எவ்வளவு.. தமிழகத்தில் 3வது பெரிய கட்சி எது? வெளியானது லிஸ்ட்!

|

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் எந்ததெந்த கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவிகிதத்தை பெற்றது என்று தேர்தல் ஆணையம் விவரங்களை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது திமுக. முதல்வராக மு.க ஸ்டாலின் மே 7ம் தேதி பதவியேற்கிறார்.

இதில் கட்சிகள் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை, வாக்கு சதவிகிதத்தை பார்க்கலாம்.

அதிக வாக்குகள்... அடித்து நொறுக்கிய ஐபி.. 3வது இடத்தில் எடப்பாடியார்.. 5வது இடத்தில் ஸ்டாலின்!அதிக வாக்குகள்... அடித்து நொறுக்கிய ஐபி.. 3வது இடத்தில் எடப்பாடியார்.. 5வது இடத்தில் ஸ்டாலின்!

வெற்றி விவரம்

வெற்றி விவரம்

  • திமுக கூட்டணி - 159 இடங்களில் வெற்றி
  • திமுக - 125 இடங்களில் வெற்றி
  • காங்கிரஸ் - 18
  • விசிக - 4
  • மதிமுக (உதயசூரியன் சின்னம்) - 4
  • சிபிஎம் - 2
  • சிபிஐ - 2
  • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகள் - 4 இடங்களில் வெற்றி
  • அதிமுக கூட்டணி - 75 இடங்களில் வெற்றி
  • அதிமுக - 65
  • பாமக - 5
  • பாஜக - 4
  • இதர கட்சிகள் - 1 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது
  • மநீம+, நாம் தமிழர், அமமுக+ - எங்கும் முன்னிலை, வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 234 இடங்களில் 118 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்கிறார்!
வாக்கு சதவிகிதம்

வாக்கு சதவிகிதம்

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிபெற்றுள்ள நிலையில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையிலான வாக்கு சதவிகிதம் (கூட்டணி கட்சிகளை சேர்க்காமல்) வெறும் 3.87%தான்.

தமிழக சட்ட சபை தேர்தலில் கட்சிகள் பெற்று வாக்கு சதவிகிதம்.

  • திமுக - 37.15%
  • அதிமுக - 33.28%
  • காங்கிரஸ் - 4.28%
  • பாட்டாளி மக்கள் கட்சி - 3.81%
  • இந்திய கம்யூனிஸ்ட் - 1.09%
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 0.85%
  • தேமுதிக - 0.43%
  • பாஜக - 2.63%
  • விசிக- 1.3%
  • முஸ்லிம் லீக்- 0.48%
  • மக்கள் நீதி மய்யம் 2.4%
  • நாம் தமிழர் கட்சி 6.6%
  • அமமுக 2.4%
மூன்றாவது பெரிய கட்சி

மூன்றாவது பெரிய கட்சி

தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு அடுத்த நாம் தமிழர் கட்சி பல இடங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. நாம் தமிழர்தான் பல இடங்களில் மூன்றாவது இடம் பிடித்தது என்பதால் வாக்கு சதவிகித ரீதியாக அந்த கட்சி 3வது பெரிய கட்சியாக வாய்ப்புள்ளது. நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி 6.6% வாக்குகளை பெற்றுள்ளது.

 அமமுக, மநீம

அமமுக, மநீம

இதில் அமமுக, மநீம ஆகிய கட்சிகளும் பல தொகுதிகளில் டஃப் பைட் கொடுத்துள்ளது. அந்த முக்கியமாக மநீம கணிசமான வாக்குகளை கொங்கு மண்டலத்தில் பெற்றுள்ளது. இதனால் இரண்டு கட்சிகளும் தனிப்பட்ட வகையில், மக்கள் நீதி மய்யம் 2.4%, அமமுக 2.4% என்ற வாக்கு சதவிகிதத்தை பெற்று உள்ளது.

English summary
Tamilnadu election result 2016: Vote percentage DMK, AIADMK and other parties in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X