5 வருட போராட்டம்.. "203" வாக்கிற்காக போராடி 3374 வாக்கு வித்தியாசத்தில் மாஸ் வெற்றி.. அப்பாவு சாதனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 5 வருடமாக தனது வெற்றிக்காக சட்ட போராட்டம் நடத்திய திமுக அப்பாவு ராதாபுரம் தொகுதியில் தற்போது 3374 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை வெளியாகி உள்ள முன்னணி நிலவரங்களின்படி திமுக கூட்டணி 156 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

அதிமுக கூட்டணி 78 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திமுக தனியாக 125 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் திமுகவின் வெற்றி இந்த தேர்தலில் உறுதியாகி உள்ளது.

போட்டி

போட்டி

இந்த சட்டசபை தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக அப்பாவு களமிறக்கப்பட்டார். ராதாபுரம் தொகுதியில் கடந்த 2016 சட்டசபை தேர்தலிலேயே அப்பாவு வெற்றிபெற வாய்ப்பு இருந்தது. அந்த தேர்தலில் அப்பாவு மற்றும் அதிமுக வேட்பாளர் இன்பதுரை இடையே கடும் போட்டி நிலவியது.

வெற்றி

வெற்றி

இதில் கடைசி கட்ட வாக்கு எண்ணிக்கைக்கு பின் 45 வாக்கு வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் 2016ல் நடந்த இந்த தேர்தலில் 203 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை என்று அப்பாவு சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதையடுத்து இந்த தபால் வாக்குகளும், கடைசி 3 சுற்று வாக்குகளும் எண்ணப்பட்டன.

ஆனால்

ஆனால்

சட்ட போராட்டத்திற்கு பின் இந்த வாக்குகள் எண்ணப்பட்டன. ஆனால் அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் இன்பத்துரை மேல்முறையீடு செய்யவே, இந்த தபால் வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதில் அப்பாவு வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் முடிவு அறிவிக்கப்படவில்லை.

தேர்தல்

தேர்தல்

இந்த நிலையில் அடுத்தே தேர்தல் வந்த நிலையில் மீண்டும் இங்கு அப்பாவு திமுக சார்பாக களமிறங்கினார். சட்ட போராட்டத்தில் இவருக்கு நீதி உரிய நேரத்தில் கிடைக்காத நேரத்தில் மீண்டும் திமுக இவரை களமிறங்கியது. இந்த நிலையில் 5 வருட போராட்டத்திற்கு பின் இங்கு அப்பாவு அபார வெற்றி பெற்றுள்ளார்.

5 வருட போராட்டம்

5 வருட போராட்டம்

5 வருடமாக தனக்கு நீதி வேண்டி போராடி அப்பாவு தற்போது இன்பத்துரைக்கு எதிராக 3374 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். 48620 வாக்குகள் பெற்ற அப்பாவு வென்றுள்ளார். 45246 வாக்குகள் பெற்று இன்பத்துரை தோல்வி அடைந்துள்ளார். 5 வருடமாக தனது வெற்றிக்காக சட்டபோராட்டம் நடத்தியவர்.. தற்போது முறையாக தேர்தல் மூலம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+