தமிழக சட்டசபைத் தேர்தல் ரிசல்ட் 2021: திமுக கூட்டணி அமோக வெற்றி...முதல்வராகிறார் மு.க ஸ்டாலின்
நடந்து முடிந்துள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கப் போகிறார்.
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது திமுக. முதல்வராக மு.க ஸ்டாலின் இன்னும் தினங்களில் பதவியேற்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. மே 2 ஆம் ஞாயிறுக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த சட்டசபைத் தேர்தலில் திமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ளது.
தற்போது வரை 234 தொகுதிகளில் முழு வெற்றி முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் வென்றுள்ளது..

திமுக கூட்டணி - 159 இடங்களில் வெற்றி
திமுக - 125 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் - 18
விசிக - 4
மதிமுக (உதயசூரியன் சின்னம்) - 4
சிபிஎம் - 2
சிபிஐ - 2
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகள் - 4 இடங்களில் வெற்றி
அதிமுக கூட்டணி - 75 இடங்களில் வெற்றி
அதிமுக - 65
பாமக - 5
பாஜக - 4
இதர கட்சிகள் - 1 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது
மநீம+, நாம் தமிழர், அமமுக+ - எங்கும் முன்னிலை, வெற்றி பெறவில்லை
தமிழகத்தில் ஆட்சி அமைக்க 234 இடங்களில் 118 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்கிறார்!












Click it and Unblock the Notifications