விசிகவின் மாபெரும் எழுச்சி.. லோக்சபா போலவே சட்டசபையிலும் சொல்லி அடித்த திருமா.. திமுகவிற்கு சிக்னல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2019 லோக்சபா தேர்தலில் விசிக சிறப்பாக செயல்பட்டது போலவே தமிழக சட்டசபை தேர்தலில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. காலையில் கொஞ்சம் திக்கி திணறிய திமுக கூட்டணி போக போக முன்னிலை பெற்று தற்போது 151 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

அதிமுக கூட்டணியோ 82 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. போக போக திமுக கூட்டணி இன்னும் சில இடங்களில் கூடுதலாக முன்னிலை பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

வாய்ப்பு

வாய்ப்பு

திமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்த எல்லா கட்சிகளும் இந்த சட்டசபை தேர்தலில் கிட்டத்தட்ட நன்றாகவே செயல்பட்டு உள்ளது. திமுக இந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு பெரிதாக இடங்களை ஒதுக்கவில்லை. காங்கிரஸ் 25 தொகுதிகளில் விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது.

விசிக

விசிக

இதில் விசிக போட்டியிட்ட 6 தொகுதிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் எல்லாம் கிட்டத்தட்ட சிறப்பாகவே செயலாற்றி உள்ள நிலையில் விசிக தான் போட்டியிட்ட 6 தொகுதிகளில் தனி சின்னத்தில் மொத்தம் 4ல் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னிலை

முன்னிலை

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் விசிக களமிறங்கியது. இதில் மொத்தம் 4 தனி தொகுதிகள், 2 பொது தொகுதிகள் ஆகும்.

திருப்போரூர் - எஸ்.எஸ்.பாலாஜி

நாகப்பட்டினம் - ஆளூர் ஷா நவாஸ்

காட்டுமன்னார் கோயில் (தனி) - சிந்தனை செல்வன்

வானூர் (தனி) - வன்னி அரசு

அரக்கோணம் (தனி) - கௌதம சன்னா

செய்யூர் (தனி) - பனையூர் பாபு ஆகிய தொகுதிகள் விசிகவிற்கு ஒதுக்கப்பட்டது.

இதில் செய்யூர்

இதில் செய்யூர்

காட்டுமன்னார்கோவில்

நாகப்பட்டினம்

திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் விசிக முன்னிலை பெற்றுள்ளது.

வானூர் (தனி) - வன்னி அரசு

அரக்கோணம் (தனி) - கௌதம சன்னா ஆகியோர் மட்டுமே விசிக சார்பாக போட்டியிட்டு அதிமுக வேட்பாளர்களிடம் தோல்வி அடைந்துள்ளனர். மொத்தத்தில் விசிக போட்டியிட்ட 6 தொகுதிகளில் 4ல் அசத்தலாக வென்றுள்ளது. லோக்சபா தேர்தலில் விசிக 2ல் போட்டியிட்டு இரண்டிலும் வென்றது.

அமைச்சரவை

இதனால் கண்டிப்பாக திமுக அமைச்சரவையில் விசிக ஒரு இடமாவது பெறும் என்று கூறப்படுகிறது. இதை குறித்து விசிக தலைவர் டாக்டர் எம்பி திருமாவளவனும் டிவிட் செய்து சிக்னல் கொடுத்துள்ளார். திமுகவின் வெற்றிக்கு விசிகவும் முக்கிய காரணம் என்று கூறி.. இப்போதே அமைச்சரவைக்கு திருமா சிக்னல் கொடுத்துள்ளார். திருமா தனது டிவிட்டில், திமுகவின் வெற்றியில் விசிக பெரிய பங்கு வகித்தது. தலித் மக்களின் வாக்குகளை திமுக பக்கம் திருப்பியதில் நாங்கள் பெரிய பங்கு வகித்தோம். சானதானத்திற்கு எதிராக மக்களை அணி திரட்டி உள்ளோம்.

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

2 பொதுத் தொகுதி 2 தனித்தொகுதி. 67% வெற்றி. வெறுப்பு அரசியலைத் தகர்த்தெறிந்து வெல்லும் விடுதலைச்சிறுத்தைகள். தலித் கட்சியென முத்திரை குத்தி சுருக்கி முடக்கி தனிமைப்படுத்த முயன்றோரின் சதியை முறியடித்தது பானை. இது சிறுத்தைகளின் #வரலாற்றுச்_சாதனை என்று திருமா குறிப்பிட்டுள்ளார். இதனால் கண்டிப்பாக திமுக அமைச்சரவையில் விசிக இடம்பெறுவதற்கான கோரிக்கைகளை வைக்கும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+