ஸ்டாலின் "அன்று" சொன்ன வார்த்தை.. தேர்தல் நேரத்தில் விஜய், அஜித் தந்த சிக்னல்.. இதுதான் பின்னணியா?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் நடிகர் விஜய், அஜித் இரண்டு பேரும் வைரலாகி வருகிறார்கள். விஜய், அஜித் இருவரும் இன்று வாக்களிக்க வந்த விதமும், திமுக தலைவர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன் சொன்ன விஷயம் ஒன்றும் இணையத்தில் தாறுமாறாக ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.. அப்படி என்ன நடந்தது?
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். இதுவரை 60% வரை மக்கள் வாக்களித்துள்ளனர். இன்னும் சில மணி நேர வாக்குப்பதிவு மீதம் இருப்பதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அஜித் இன்று காலை 7 மணிக்கே முதல் ஆளாக வந்து வாக்களித்தார். திருவான்மியூர் தொகுதியில் முதல் ஆளாக வாக்களித்தார். அதன்பின் நடிகர் விஜயும் காலை 9 மணி அளவில் நீலாங்கரையில் வாக்களித்தார்.

எப்படி
இவர்கள் இருவரும் வாக்களித்தது வைரலாக காரணம் என்ன என்று பலருக்கும் தெரிந்து இருக்கும்... அஜித் கருப்பு சிவப்பு மாஸ்க் அணிந்து வந்ததும். விஜய் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்ததும்தான் இதற்கு காரணம். இவர்கள் இருவரும் கருப்பு சிவப்பு நிறத்தை மறைமுகமாக ஆதரிக்கிறார்கள் என்று இவர்களின் ரசிகர்கள் தொடங்கி நெட்டிசன்கள் பலர் கருதுகிறார்கள்.

திமுக
திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இவர்கள் இப்படி கருப்பு சிவப்பை முன்னிறுத்தினார்கள் என்று கூறப்பட்டது. தேர்தல் நேரத்தில் தங்கள் நிலைப்பாட்டை ரகசியமாக மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று இவர்கள் இப்படி செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்டாலின் சொன்ன விஷயம் ஒன்றும் இணையத்தில் வைரலாக தொடங்கி உள்ளது.

ஸ்டாலின்
சன் டிவியில் ஒளிபரப்பான ஸ்டாலின் செய்வாரா நிகழ்ச்சியில் சினிமா குறித்த கேள்வி ஒன்றுக்கு ஸ்டாலின் சுவாரசியமாக பதில் அளித்து இருந்தார். அதில், நான் அவ்வப்போது சினிமா பார்ப்பேன். நல்ல சினிமா என்றால், தரமான படம் என்றால் பார்ப்பேன். சினிமா பொறுத்தவரை ஸ்டைல் நடிகர் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எனக்கு மிகவும் பிடிக்கும். இளைஞர்களை கவர கூடிய வகையில் விஜயை எனக்கு பிடிக்கும்.

செம்ம
நவரசம் கலந்த நடிப்பில் அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும், இவர்கள் மூன்று பேர் படங்களை பார்ப்பேன், என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். ஒரே கேள்விக்கு மூன்று முக்கியமான நடிகர்களையும் பிடிக்கும் என்று ஸ்டாலின் கூறியது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அப்போதே ஸ்டாலினை விஜய், அஜித் ரசிகர்கள் பாராட்டி இருந்தனர். இந்த நிலையில்தான் தற்போது விஜய், அஜித் இருவரும் மறைமுகமாக திமுகவிற்கு ஆதரவு கொடுத்ததாக நெட்டிசன்கள் பேசிக்கொள்கிறார்கள்.

இணைப்பு
ஸ்டாலினின் பேட்டிக்கும், இன்று நடந்த சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள். விஜயோ, அஜித்தோ திமுக ஆதரவு என்று எங்கும் வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் நெட்டிசன்களோ..ஸ்டாலின் பேட்டியையும், இன்று நடந்த சம்பவங்களையும் இணைத்து வைத்து பேசுகிறார்கள். ஸ்டாலின் அன்று இவர்களை பாராட்டியதன் பின்புலம் இதுதான்.

ஆனால்
இவர்களின் ஆதரவு திமுகவிற்கு இருக்கிறது, அதனால்தான் அன்று ஸ்டாலினும் இவர்களை வெளிப்படையாக பாராட்டினார். திமுகவிற்கு இவர்களுக்கும் இடையில் நல்ல அண்டர் ஸ்டாண்டிங் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். இதுதான் இன்று நடந்த சம்பவத்தின் பின்னணியாம்.. ஆனால் விஜயோ, அஜித்தோ எங்குமே திமுக குறித்து அதிகாரபூர்வமாக ஆதரவு தருவதாக தெரிவிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications