மின் இணைப்பு பெற காலதாமதமா? இனி கவலையவிடுங்க! தமிழக மின்சாரத் துறையில் 3 முக்கிய அறிவிப்புகள்
சென்னை: தமிழகத்தில் மின்சாரத் துறையில் 3 முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இனி காலதாமதம் என்றால் அதற்கு மின் துறை பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
மின்சாரம் கண்டுபிடித்திருந்தாலும் அது இல்லாமலேயே காலம் தள்ளிய காலம் போய் இன்று மின்சாரம் என்பது அவசியமானதாகிவிட்டது. ஆனால் மின் இணைப்பை பெறுவது என்பது சில நேரங்களில் கடினமாகிவிட்டது. புதிய மின் இணைப்புக்கு பட்டா, வில்லங்கம் பார்த்தல் என சில குறிப்பிட்ட விதிகள் உள்ளன.
இந்த விதிகள் சரியாக இருந்தால் புதிய மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் சில இடங்களில் காலதாமதமாகி வருகிறது. இதனால் ஆண்டுக்கணக்காக மின் இணைப்பு கிடைக்காமல் இருளிலேயே பொழுதை கழிப்போரின் எண்ணிக்கை ஏராளம்.

மாதத்திற்கு இத்தனை மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் பலர் மின்சார வாரியத்திற்கு நடையாய் நடந்து வருகிறார்கள். அது போல் நாம் நிறைய நாளிதழ்களில் படித்திருப்போம். வீட்டில் பேன், லைட்டை தவிர வேறு அதிக வாட்ஸ் கொண்ட எந்த வித மின்சார சாதஙனங்களும் இல்லாத வீடுகளில் ஆயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் மின் கட்டணம் வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
பின்னர் சம்பந்தப்பட்ட நபர் மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டு பழைய ரசீதுகளில் தான் பயன்படுத்திய யூனிட்கள் அதற்கு அவர் செலுத்திய கட்டணத்தை காட்டியவுடன் அவரது பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். இந்த நிலையில் மக்களின் இன்னலை போக்க தமிழ்நாடு மின்சார துறையில் 3 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மின் இணைப்பு காலதாமதத்திற்கு ஒரு விடிவு பிறக்கும் என தெரிகிறது.

மின்சார வாரியம் கொண்டு வந்த அந்த 3 முக்கிய அறிவிப்புகளை பார்ப்போம்.
- மின் இணைப்புக்காக புதிதாக விண்ணப்பித்தால் 7 நாட்களுக்குள் இணைப்பை கொடுக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படுகிறது என்றால் ரூ 100 முதல் ரூ 1000 வரை இழப்பீடாக மின்சார வாரியம் கொடுக்க வேண்டும்.
- உங்களுக்கு மின் பயன்பாடு குறைந்து மின் கட்டணம் அதிகமாக வந்திருந்தால், அது குறித்து குறைபாட்டு மனுவை மின்சார வாரியத்தில் சமர்ப்பிக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதன் மீது மின்சார துறை 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காவிட்டால் அதற்கான காலதாமதத்திற்கு மின்சார துறைதான் பொறுப்பு. அது போல் உங்களுக்கு இழப்பீடு தரக் கூடிய விதியும் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
- சில இடங்களில் மின் இணைப்புக்காக விண்ணப்பித்தாலும் காலதாமதம் ஆகும். ஏனென்றால் அந்த பகுதிகளில் புதிதாக கம்பம் நடும் பணிகளை செய்ய வேண்டும். டிரான்ஸ்பார்மர் நிறுவ வேண்டும். இந்த மாதிரியான இடங்களுக்கு 90 நாட்களுக்குள் கம்பம் நடுதல், டிரான்ஸ்பார்மர் வைத்தல் பணிகளை செய்து முடித்திருக்க வேண்டும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications