நிரஞ்சன் மார்டி ஓய்வு.. புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே. பிரபாகர் நியமனம்.. தமிழக அரசு உத்தரவு
சென்னை: புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே. பிரபாகரரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக உள்துறை செயலாளராக இருந்தவர் நிரஞ்சன் மார்டி. இவர் தமிழகத்தை சேர்ந்தவர். 1986-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
நெடுஞ்சாலை சிறு துறைமுகங்கள் துறை செயலாளர். சிறு குறு நடுத்தர தொழில்கள் துறையின் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்தார். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு உள்துறை செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டார்.

மீண்டும் உள்துறை செயலாளர்
பின்னர் அவரை ஜெயலலிதா புள்ளியியல் மற்றும் பொருளியல் துறை ஆணையாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். பின்னர் ஜெயலலிதா இறந்த பிறகு 2017-ஆம் ஆண்டு அவர் மீண்டும் உள்துறை செயலாளராக்கப்பட்டார்.

ரேஸில் இருந்த 6 பேர்
இந்த நிலையில் அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் உள்துறை செயலாளர் பதவிக்கு யார் நியமிக்கப்படுவர் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சீனியாரிட்டி அடிப்படையில் வி.கே ஜெயக்கொடி, 2. மீனாட்சி ராஜகோபால், 3. ரோல்கும்லீன் பஹ்ரீல், 4. ராஜீவ் ரஞ்சன், 5. சந்திரமவுலி, 6. ஜன்மோகன் ராஜு ஆகியோர் ரேஸில் இருந்தனர்.

எஸ் கே பிரபாகர்
இந்த 6 பேரில் 4 பேரின் பதவிக்காலம் 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே முடிவடைந்து விடுகிறது. இதனால் 1986-ஆம் ஆண்டுக்கு பிறகு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர்களே தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. அதில் நெடுஞ்சாலைகள் மற்றும் துறை துறைமுகங்கள் துறை செயலாளராக உள்ள எஸ்.கே. பிரபாகரனுக்கு அதிக வாய்ப்பு என சொல்லப்பட்டது.

வேலூர் ஆட்சியர்
இவர் முதல்வரின் துறை சார்ந்தவர் என்பதால் இவர் உள்துறை செயலாளராக நியமிக்கப்படலாம் என கூறப்பட்டது. அதன்படி தமிழக அரசின் உள்துறை செயலாளராக எஸ்கே பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகரை சேர்ந்த இவர் 1989-இல் ஐஏஎஸ் தேர்வை முடித்தவர். இவர் வேலூர் ஆட்சியராகவும் பல்வேறு துறைகளின் செயலாளராகவும் இருந்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications