அமைச்சர்கள் கார் வாங்க ரூ.26 லட்சம், எம்எல்ஏ-வுக்கு ரூ.15 லட்சம்.. உச்சவரம்பு நிர்ணயித்த தமிழக அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர்கள், சபாநாயகர், துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், கொறடா உள்ளிட்டோர் கார் வாங்க ரூ.26 லட்சம் உச்ச வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்குவது பற்றி சட்டமன்ற போக்குவரத்து படி விதிகளில் திருத்தம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எம்எல்ஏ-க்கள் கார் வாங்க ரூ.15 லட்சம் உச்சவரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

சட்டசபையில் 110 விதிகளின் கீழ் முதல்வர் விஜய், அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் கார் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் வாகனத்திற்கு ஓட்டுநர், எரிபொருள், வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு ரூ.75 ஆயிரம் வாகன படியாக வழங்கப்படும் என்றும், உதவியாளர் படியாக மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

Car

முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனிடையே திமுக, பாமக, கம்யூனிஸ்ட்டுகள் தரப்பில் தங்களுக்கு கார் தேவையில்லை என்று அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் போக்குவரத்து மற்றும் உதவியாளர் படியை உயர்த்தி வழங்குவதற்காக சட்டம் இயற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டது.

அதேபோல் அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் கார் வழங்குவது பற்றி சட்டமன்ற போக்குவரத்து படி விதிகளில் திருத்தம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர்கள், சபாநாயகர், துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், கொறடா உள்ளிட்டோர் கார் வாங்க ரூ.26 லட்சம் உச்ச வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக 40 கார்கள் வாங்கப்படும் என்பதால், இதற்கு ரூ.10.40 கோடி செலவாகும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் எம்எல்ஏ-க்களுக்கு கார் வாங்க ரூ.15 லட்சம் உச்ச வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 194 கார்கள் வாங்கப்படும் என்பதால், அதற்கு ரூ.29.10 கோடி செலவாகலாம் என்று கணிக்கப்படுகிறது. இதன் மூலமாக மொத்தமாக கார் வாங்குவதற்கு மட்டும் சுமார் ரூ.40 கோடி செலவாகலாம் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+