தமிழக அரசு விடுமுறை நாட்கள் 2023.. வெளியானது அறிவிப்பு.. 5 பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமை வருகிறது
சென்னை: தமிழக அரசு சார்பில் 2023ம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினமாக 24 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 5 நாட்கள் ஞாயிற்றுக்கிழமையாக அமைகின்றன.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுவிடுமுறை தினங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை தினம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார்.
அதன் விபரம் வருமாறு:

ஜனவரி முதல் மே வரை
ஜனவரி 1(ஞாயிறு) ஆங்கிலபுத்தாண்டு, ஜனவரி 15 (ஞாயிறு) பொங்கல், ஜனவரி 16 (திங்கள்) திருவள்ளூவர் தினம், ஜனவரி 17 (செவ்வாய்) உழவர் தினம், ஜனவரி 26 (வியாழன்) குடியரசு தினம், பிப்ரவரி 5(ஞாயிறு) தைப்பூசம் மார்ச் 22 (புதன்) தெலுங்கு வருடப்பிறப்பு ஆகியவற்றுக்கு அரசு விடுமுறை விடுக்கப்பட உள்ளது. மேலும் ஏப்ரல் 1 (சனி) வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, ஏப்ரல் 4(செவ்வாய்) மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 7 (வெள்ளி) புனித வெள்ளி, ஏப்ரல் 14 (வெள்ளி) தமிழ் புத்தாண்டு/அம்பேத்கர் ஜெயந்தி, ஏப்ரல் 22(சனி) ரம்ஜான், மே 1(திங்கட்கிழமை) மே தினம் ஆகிய தினங்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் முதல் டிசம்பர் வரை
ஜூன் 29 (வியாழன்) பக்ரீத், ஜூலை 29 (சனி) மொகரம், ஆகஸ்ட் 15 (செவ்வாய்) சுதந்திர தினம், செப்டம்பர் 6 (புதன்) கிருஷ்ண ஜெயந்தி, செப்டம்பர் 17 (ஞாயிறு) விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் 28 (வியாழன்) மிலாதுன் நபி ஆகியவை வர உள்ளது. மேலும் அக்டோபர் 2 (திங்கள்) காந்தி ஜெயந்தி, அக்டோபர் 23 (திங்கள்) ஆயுத பூஜை, அக்டோபர் 24 (செவ்வாய்) விஜயதசமி, நவம்பர் 12 (ஞாயிறு) தீபாவளி, டிசம்பர் 25 (திங்கள்) கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட உள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் 5 நாள்
இதில் ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தைப்பூசம் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட 5 அரசு விடுமுறை தினங்கள் ஞாயிற்றுக்கிழமை வர உள்ளன. முக்கிய பண்டிகையாக உள்ள ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தீபாவளி ஆகிய இரண்டும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர். இந்த பண்டிகைகள் வேறு தினத்தில் வந்திருந்தால் கூடுதலாக விடுப்பு கிடைத்து இருக்கும் என கூற தொடங்கி உள்ளனர்.

கடந்த ஆண்டு எப்படி?
கடந்த 2022ம் ஆண்டு மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. இதில் உழவர் தினம், மே தினம், பக்ரீத்,காந்தி ஜெயந்தி, மிலாதுன் நபி, கிறிஸ்துமஸ் என 6 அரசு விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமைகளாக இருந்தன. இதனை ஒப்பிடும்போது தற்போது ஒரு நாள் குறைந்துள்ளது. இது சற்று ஆறுதலான ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வன்னி அரசு வந்ததும் வராததுமா செய்த வேலை.. அரசு அதிகாரிகள் பங்கேற்ற தாட்கோ கூட்டத்தில் என்ன நடந்தது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications