செப்டம்பர்- அக்டோபரில் பரவ காத்திருக்கும் கொரோனா 3ஆவது அலை.. தயார் நிலையில் தமிழக அரசு?
சென்னை: சிங்கப்பூர், பிரேசிலை போல் தமிழகத்தில் கொரோனாவின் 3ஆவது அலை வந்தால் அதை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் முதல் அலையை விட இரண்டாவது அலை வீரியமிக்கதாகவே இருக்கிறது. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தடுப்பூசி மட்டுமே கொரோனாவை எதிர்க்கும் ஆயுதம் என அரசு கூறிவருகிறது.
3ஆவது அலை வரும் என இந்திய மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த அலை குறிப்பாக குழந்தைகளை குறி வைத்து தாக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள். தற்போது ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, போலாந்து, கனடா, சிங்கப்பூர், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் 3ஆவது கொரோனா அலை தொடங்கிவிட்டது.

3ஆவது அலை
இந்த நிலையில் தமிழகத்தில் 3ஆவது அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த அலையாநது தவிர்க்க முடியாதது என்றும் இது இந்தியாவில் செப்டம்பர் - அக்டோபர் காலத்தில் தொடங்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெற்றிகரம்
கொரோனா இரண்டாவது அலையை வெற்றிகரமாக கையாண்டு கேஸ்கள் குறைய வழிவகை செய்தாகிவிட்டது. அது போல் 3ஆவது அலையை எதிர்கொள்ள முன்கூட்டியே என்னென்ன செய்ய வேண்டியிருக்கிறது என்பதை பார்ப்போம். முதலில் உடனடியாக தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தடுப்பூசிகளை போட வேண்டும்.

தடுப்பூசி
இந்த அலை குறிப்பாக குழந்தையை தாக்கும் என்பதால் குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனை ஓட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு 5 கோடி தடுப்பூசிகளுக்கு டெண்டர் புள்ளி கோரியுள்ளது. இதுவரை எந்த நிறுவனமும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விமான நிலையங்கள்
அவ்வாறு இருக்கையில் பழைய டெண்டரில் உள்ள குறைகளை ஆராய்ந்து விரைவில் புதிய டெண்டரை கோர வேண்டும். ஆக்ஸிஜன் வங்கிகளை அதிகரிக்க வேண்டும். பெரிய பெரிய நிறுவனங்களை ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க செய்ய வேண்டும். திரவ ஆக்ஸிஜனை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல ரயில்வே, விமான நிலையங்களை பயன்படுத்த வேண்டும்.

தடுப்பூசி
கிராமங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடுக்கி விட வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தளர்வுகள் விதிக்கப்பட்டிருந்தால் அங்குள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும். அமெரிக்காவின் ஃபைசர் தடுப்பூசியை 12 வயது முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு செலுத்த அங்கிருந்து பெற மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். இந்த தடுப்பூசி நன்றாக வேலை செய்கிறது என கூறுகிறார்கள்.

கொரோனா விதிகள்
கூடுதல் படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் கூடிய இடங்களை அமைக்க வேண்டும். அப்போதுதான் 2ஆவது அலை போல் 3 ஆவது அலையில் உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா குறைந்த மாவட்டங்கலில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க ஏழை எளிய நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு செய்யப்பட்டது. எனவே பொதுமக்கள் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும். பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விஷயங்களை செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications