நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல் துறை மரியாதை.. தேர்தல் ஆணையம் அனுமதி
சென்னை: நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல் துறை சார்பில் இறுதி மரியாதை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
Recommended Video

நடிகர் விவேக் மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய விவேக்கின் உடலுக்கு தமிழக அரசு மரியாதை கொடுக்க முடிவு செய்தது.

தமிழக சட்டசபைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு அனுமதி கேட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையமும் அனுமதி கொடுத்தது. இதுகுறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பில் தமிழ்த் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் சின்னக் கலைவாணர் என அழைக்கப்படுபவரும் தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிப்பால் புகழ் பெற்றவரும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றவரும் தனது ஈடு இணையற்ற கலைச் சேவையாலும், சமூக சேவையாலும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவரும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த விவேக் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அன்னாரின் கலை மற்றும் சமூகச் சேவையினை கவுரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதி சடங்குகளின்போது காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு ஆணையிட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications