வருமானம்தான் முக்கியம்.. டாஸ்மாக் போல கஞ்சா கடைகளை திறந்தாலும் திறப்பர்! இயக்குநர் பேரரசு தாக்கு
சென்னை: சாராயம் விற்ற காசில்தான் அரசாங்கமே நடக்கிறது. இனி கஞ்சா கடையும் திறப்பார்களோ என்னவோ என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் பிள்ளை இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அதாவது தெருக் கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு, அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா, நடிகர் கூல் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வீரப்பன் மனைவி
இந்த விழாவில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும் கலந்து கொண்டார். இந்த படத்தில் சாராயம் அபாயம் என்ற பாடலை பாடலாசிரியர் ஆலயமணி எழுதியுள்ளார். இந்த படம் தருமபுரி மாவட்டத்தில் கதையாக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் டாஸ்மாக்கிலேயே படப்பிடிப்பை எடுத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

பேரரசு
இதையடுத்து இயக்குநர் பேரரசு கூறுகையில் ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் யார் என பார்த்து படம் பார்க்க முடிவு செய்யாதீர்கள், படம் என்ன மாதிரியான கருத்தை சொல்கிறது என்பதை பார்த்து படம் பாருங்கள். முதல்வரின் மகனும் சினிமாவில் நடிக்கலாம். வீரப்பன் மகளும் சினிமாவில் நடிக்கலாம். சினிமா யாரையும் ஏற்றுக் கொள்ளும்.

தெருக்கூத்து
தெருக்கூத்து அழிந்து கொண்ட வருகிறது என்கிறார்கள். ஆனால் டாஸ்மாக் முன்பாக குடித்துவிட்டு விதவிதமாக தெருக்கூத்து நடனங்களை, குடிப்பவர்கள் ஆடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். விஜய், பிரபுதேவா ஆகியோரை விட குடிமகன்கள் சூப்பராக ஆடுகிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவிகள் மது அருந்தும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

மதுவிலக்கு
மதுவிலக்கு என்கிற வாக்குறுதியை கொடுத்துவிட்டு அதே மதுவை கொடுத்துதான் ஓட்டு போட சொல்கிறார்கள். இந்த படத்தில் ஆலய மணி எழுதிய பாடலான சாராயம் அபாயம் என்பது நமக்கான அபாய மணியாகும். இந்த பாடலை டாஸ்மாக் கடைகள் முன்பு ஒலிக்கப்பட்டு கூட மது ஒழிப்பு பிரசாரம் செய்யலாம். மதுவிலக்கு கொண்டு வந்தால் யாரும் ஓட்டு போட மாட்டார்கள் என அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள்.

அரசியல்வாதிகள்
எந்த இடத்திலும் அரசியல்வாதிகள் பேசும் போது போதை பொருட்கள் லிஸ்டில் மதுவை சேர்ப்பதில்லை. மதுவை விற்கலாம் என்றால் இனி வரும் நாட்களில் டாஸ்மாக்கை போல கஞ்சாகடையும் ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆன்லைன் ரம்மியால் எங்கேயோ எப்போதோ ஓரிருவர் இறக்கிறார்கள். ஆனால் மதுவால் தினமும் இறப்பு சம்பவம் ஏற்படுகிறது.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மியை ஒழிப்பதற்காக சட்டசபையில் குரல் கொடுப்பவர்கள், ஏன் மதுவை ஒழிக்க குரல் கொடுக்கவில்லை? அதற்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும். பெண்களுக்கு இவர்கள் கொடுப்பதாக சொல்லும் ரூ 1000 தேவையில்லை. இவர்கள் அறிவித்த ஓசி பஸ்ஸும் தேவையில்லை. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என கூறுகிறீர்கள். ஏழை மாணவர்கள் நீட் தேர்வு எழுத நீங்களே ஏன் நீட் பயிற்சி அளிக்கக் கூடாது?

டாஸ்மாக் வருமானம்
டாஸ்மாக் வருமானம்தான் அதிகமாக வருகிறது. எனவே அந்த காசில் மக்களுக்கு எந்த இலவசமும் வேண்டாம். அதன் மூலம் பாவத்தை மக்கள் தலையில் ஏற்ற வேண்டாம். இந்த மாவீரன் பிள்ளை படம் சமுதாயத்திற்கு எடுக்கப்பட்ட படம் என்றார். வீரப்பன் மகள் விஜயலட்சுமிக்கு நடிக்க வேண்டும் என்பது சிறு வயது விருப்பமாக இருந்ததாகவும் அது இப்போது நிறைவேறியதாகவும் தெரிவித்தார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications