8% வளர்ச்சி.. ஒரு ரூபாயில் வருவாய், செலவு எவ்வளவு? பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட தமிழக அரசு!
சென்னை: நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.2.78 லட்சமாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், ஒரு ரூபாயில் தமிழக அரசின் வருவாய் மற்றும் செலவு குறித்த தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முந்தைய நாளில் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடும். அந்த வகையில் தமிழ்நாடு அரசு தரப்பில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனையொட்டி இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும். அந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி 8 சதவிகிதமாக இருக்கும். வலுவான கொள்கை காரணமாக பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் உள்ளது. தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம் ரூ.2.78 லட்சமாக அதிகரித்துள்ளது. தேசிய சராசரியை விடவும் 1.64 மடங்கு அதிகமாகும்.
கோவை, மதுரை, திருப்பூர், திருச்சி, சேலம் போன்ற நகரங்கள் முக்கிய பங்களிப்பை அளித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் மத்திய அரசின் ரூபாய் குறியீடான ₹-க்கு பதிலாக ரூ என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.27.22 லட்சம் கோடியாகும். அதேபோல் பொருளாதார வளர்ச்சி 8.23 சதவிகிதமாக உள்ளது.
மாநிலத்தின் மக்கள் தொகையில் 31.8 சதவிகிதம் உள்ள வடக்கு மண்டலம், சிஎஸ்டிபியில் 36.6 சதவிகிதம் என்ற அதிகபட்ச பங்களிப்பை வழங்குகிறது. அதேபோல் ஒரு ரூபாயில் தமிழக அரசின் வருவாய் எவ்வளவு, செலவு எவ்வளவு என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு ரூபாயில் கடன்களை திருப்பி செலுத்துவதற்கு 9.1 சதவிகிதமும், வட்டி செலுத்துவதற்கு 14.1 சதவிகிதமும் பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல் மூலதனச் செலவுகளுக்கு 10.5 சதவிகிதமும் செய்யப்படுகிறது. அதேபோல் 18.7 சதவிகிதம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கும், 8.3 சதவிகிதம் ஓய்வூதியத்திற்கும், கடன் வழங்குதலுக்கு 3.6 சதவிகிதமும், உதவித் தொகை மற்றும் மானியங்களுக்கு 32.4 சதவிகிதமும் பயன்படுத்தப்படுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications