சளி, காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.. அரசு சுற்றறிக்கை!
சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக இருந்தது. ஈரானில் இருந்து லடாக் வந்த இருவருக்கும் ஓமனில் இருந்து காஞ்சிபுர்ம திரும்பிய ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது. இதனிடையே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை, தாய், குழந்தை, இரு உறவினர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் இத்தாலியில் இருந்து கடந்த மாதம் 29-ஆம் தேதி இந்தியா வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற அறிவுரைகள் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து துறைகளுக்கும் வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மாணவர்கள் இருமல், தும்மல் ஆகியவற்றின் போது கைக்குட்டைகளை பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் கைகளை தூய்மையாக வைக்கும் பொருட்டு அடிக்கடி தங்களை கைகளை கழுவ வேண்டும். கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்த்துவிட வேண்டும்.
காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். கொரோனா குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications