ஏழைகளுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்.. தமிழக அரசு அறிவிப்பு.. பணம் போச்சே
Recommended Video

சென்னை: ஏழைகளுக்கு 2000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கஜா புயல் பாதிப்பு, மழையின்மை போன்ற காரணங்களால் தமிழகத்தில் உள்ள ஏழை எளியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் சிறப்பு நிதி, திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்த நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ளவர்கள் குறித்து உரிய முறையில் சர்வே நடத்தாமல் 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துவதாகவும், சர்வே முடியும் வரை நிதி ஒதுக்க கூடாது என்றும், விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று தனது பதிலை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 2000 ரூபாய் வழங்கும் திட்டம் மற்றும் பயனாளிகளை அடையாளம் காணும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இவ்வாறு தாங்கள் நிறுத்தி வைத்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் மனுதாரர் தாக்கல் செய்தது வரைவு அரசாணை என்றும், அரசு தாக்கல் செய்துள்ளது தான் அசல் அரசாணை என்பதும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, லோக்சபா தேர்தலுக்குப் பிறகு வழக்கை விசாரிப்பதாக, உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் சில பலனாளிகள் பணம் பெற்றுவிட்ட நிலையில், பலருக்கும் இன்னும் அரசு நிதி கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ அதைப் பொறுத்துதான், தமிழக அரசு இந்த திட்டத்தை நீட்டிக்கும் வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எனவே, பணம் கிடைக்காத பலனாளிகள் பதற்றத்தில் உள்ளனர்.
-
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications