வாய்மையும், அறமும் இறுதியில் வெல்லும் - தமிழக ஆளுநர் தீபாவளித் திருநாள் வாழ்த்து
ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சி, வளம், நல்லிணக்கம், அமைதியை தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: வாய்மையும், அறமும் இறுதியில் வெல்லும் என்பதை தீபாவளித் திருநாள் எடுத்துக்கூறுகிறது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கம், அமைதியை தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. கொரோனா காலம் என்றாலும் மக்கள் பண்டிகை கொண்டாட்டங்களில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர். ஆடைகள், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கத் தொடங்கியுள்ளனர்.

ஐப்பசி அமாவாசைக்கு முதல்நாள் தீபாவளி பண்டிகையாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. நரகாசூர வதமாக இருந்தாலும் இந்த பண்டிகை நாளில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். ஒருவருக்கொருவர் பலகாரங்களை பரிமாறிக்கொண்டு வாழ்த்துக்களை கூறிக்கொண்டும் கொண்டாடுவது வழக்கம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் "தீபாவளியையொட்டி தமிழக மக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள். வாய்மையும், அறமும் இறுதியில் வெல்லும் என்பதை தீபாவளித் திருநாள் எடுத்து இயம்புகிறது . ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சி, வளம், நல்லிணக்கம், அமைதியை தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications