காரணமே வேற! திடீரென ஊட்டிக்கு புறப்பட்ட ஆளுநர் ரவி! மொத்த குடும்பமும் வருகை.. ஏன் தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி 7 நாள் பயணமாக ஊட்டிக்கு சென்றுள்ளார்.
கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது ஆளுநர் ஆர். என் ரவி கூட்டத்தொடரின் முதல் உரையை நிகழ்த்திவிட்டு சென்னையில் இருந்து ஊட்டி புறப்பட்டார். தனி விமானத்தில் சென்றவர் ஊட்டியில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார்.
அதன்பின் மேட்டுப்பாளையம், கோத்தகிரி ஆகிய பகுதிகளை பார்வையிட்டார். இந்த நிலையில் இன்று மீண்டும் தனி விமானம் மூலம் ஆளுநர் ஆர். என் ரவி ஊட்டி சென்றார்.

ஊட்டி
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி 7 நாள் பயணமாக ஊட்டிக்கு சென்றுள்ளார். அலுவல் பணிகள், சந்திப்புகளை முடித்துக்கொண்டு இன்று பிற்பகல் சென்னையில் இருந்து புறப்பட்டவர், சில நிமிடங்களுக்கு முன் ஊட்டிக்கு சென்றார். ஆர். என் ரவியின் உறவினர்கள், அவரின் மனைவி, 2 மகள்கள், 1 மகன் ஆகியோரும் ஊட்டிக்கு வர உள்ளனர். ஊட்டியில் ராஜ்பவன் மாளிகையில் 7 நாட்கள் இவர்கள் தங்க உள்ளனர்.

அழைப்பு
ஆளுநரின் மகளுக்கு இந்த வாரம் திருமணம் நடக்க உள்ளது. 22ம் தேதி உதகை ராஜ்பவனில் ஆளுநரின் மகள் திருமணம் நடக்க உள்ளதால் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு எளிமையாக திருமண நிகழ்வு நடக்க உள்ளது. இந்த திருமணத்திற்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு சென்றுள்ளதா என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. கடந்த மாதம் ஆளுநர் ஊட்டி சென்றது திருமண ஏற்பாடுகளை செய்வதற்காகத்தான் என்று கூறப்படுகிறது.

திருமணம்
மரியாதை கருதி மாநில தலைவர்களுக்கு அழைப்பு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊட்டியில் எளிமையாக, பெரிய ஏற்பாடுகள் இன்றி இந்த திருமணம் நடக்க உள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும், ஆளுநர் ஆர். என் ரவிக்கும் நீட் விவகாரத்தில் மோதல் நிலவி வருகிறது. ஆளுநரை கடந்த சில வாரங்களாக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஆளுநர்கள் துஷ்பிரயோகம்
பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்,. அதோடு இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஆளுநர் ரவி விவாதம் செய்து இருந்தார். தமிழ்நாடு முதல்வருக்கும் ஆளுநருக்கும் மோதல் நிலவி வரும் இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி தற்போது திருமண நிகழ்விற்காக ஊட்டிக்கு சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications