சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செமஸ்டர் தேர்வுகள் ரத்து.. மதிப்பெண்கள் இப்படித்தான் வழங்கப்படும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பை தொடர்ந்து தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கு விலக்கு அழைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Govt released the rules for allocating marks after canceling semesters

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் பருவத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. யுஜி கலை படிப்புகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளும், பொறியியல் படிப்பில் முதல், இரண்டாம், மூன்றாம் ஆண்டு தேர்வுகளும், பிஜி படிப்பில் முதலாம் ஆண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஓபிசி இட ஒதுக்கீடு.. தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.. ம.நீ.ம கமல்ஹாசன் வேண்டுகோள்!ஓபிசி இட ஒதுக்கீடு.. தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.. ம.நீ.ம கமல்ஹாசன் வேண்டுகோள்!

அதன்படி,

சென்ற பருவத்தில் கடைசியாக மாணவர்கள் பெற்ற புறமதிப்பீட்டு மதிப்பெண்கள் 30% (external) இந்த பருவத்தில் மாணவர்கள் பெற்ற அகமதிப்பீடு மதிப்பெண் 70% (internal) எடுத்துக்கொண்டு முதன்மை படங்களுக்கு 100% மதிப்பெண் வழங்கப்படும்.

  • துணை பாடங்கள் மற்றும் விருப்ப பாடங்களுக்கு 100%அகமதிப்பீட்டு முறையில் முழுக்க முழுக்க மதிப்பெண் வழங்கப்படும்.
  • செய்முறை தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் ஆய்வக மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்.
  • மாணவர்கள் முந்தைய தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அந்த தேர்வுகளை மீண்டும் எழுத வேண்டும்.
  • தொலைதூர கல்வி பெறும் மாணவர்களுக்கு இந்த மதிப்பெண் முறை பொருந்தும்.
  • குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளித்து தேர்ச்சி பெற வழி செய்யப்படும்.

தாங்கள் பெற்ற மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் பின்பு தேர்வு எழுத விரும்பினால் தேர்வு எழுதலாம் என்று தமிழக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

English summary
Tamilnadu Govt released the rules for allocating marks after canceling semesters in Colleges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X