அக்ரகார நிறுவனமான கலாஷேத்ரா.. பாலியல் புகார் குற்றவாளிகள் ஒருத்தரையும் விடாதீங்க- கி.வீரமணி ஆவேசம்
சென்னை: சென்னை கலாஷேத்ரா நிறுவனத்தில் பாலியல் புகாருக்குள்ளான அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: 1962 இல் அடையாறிலிருந்து திருவான்மியூருக்கு மாற்றப்பட்டது கலாஷேத்ரா நிறுவனம். இது ஒரு ஒன்றிய அரசு நிறுவனமாகும். இந்தியா முழுவதும் இந்த நிறுவனத்துக்கு மிகப்பெரிய அளவில் விளம்பரம் உண்டு. முழுக்க முழுக்க ஓர் அக்ரகார நிறுவனமாகவே நடப்பிலும், செயல்பாட்டிலும் காணப்படக்கூடிய நிறுவனம் இது. ஒன்றிய அரசின் கலாச்சார ஆணை யத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனத்தில் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் பெரும் பாலும் அக்ரகாரமாகவே காட்சி அளிக்கும்.

இந்த நிறுவனத்தில் பயிலும் மாணவிகள் பாலியல் துன்பத்திற்கு ஆளாக்கப்படுவதாக பல கட்டங்களிலும் புகார்கள் வந்ததுண்டு. ஆனால், யார்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. இப்பொழுது பாலியல் துன்புறுத்தல் பெரும் அளவில் நடந்த காரணத்தால், பிரச்சினை முற்றி, வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. மாணவிகள் நிறுவனத்தை எதிர்த்து இரவு பகலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தும் அளவுக்கு உச்சத்தை அடைந்துவிட்டது. விடுதி இழுத்து மூடப்பட்டது.
மகளிர் தேசிய ஆணையத்திடம் மாணவிகள் எழுத்துப்பூர்வமாகப் புகார்கள் கொடுத்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இதுகுறித்து முதலமைச்சர் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் அனுப்பப்பட்டு உரிய விசாரணை நடத்திட ஆணை யிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள்மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என்று முதல மைச்சர் அறிவித்துள்ளார். பேராசிரியர் ஹரிபத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ் ணன், சிறீநாத்மீது மாணவிகள் புகார் கொடுத்திருந்தும், ஒரு பேராசிரியர்மீது 3 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பதுங்கியிருந்த ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த கலாஷேத்ராவின் மேனாள் மாணவி, பேராசிரியர் ஹரிபத்மன் மீது எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரின் அடிப்படையில் அடையாறு மகளிர் காவலர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் ''விஸ்வரூபம்'' எடுத்திருக்கும் நிலையில் வழக்கு விசாரணைக்குத் தேவையான சான்று களைத் திரட்டும் பணியில் மாநில காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மாணவி அளித்திருக்கும் புகாரின் பேரில் 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை நடந்ததாக குறிப்பிட் டுள்ளார். இதுதொடர்பாக பேசிய காவல்துறை அதி காரிகள் 'பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேவையான சான்றுகளைத் திரட்டி வருகிறோம். அதன்பின்னரே கலாஷேத்ரா பாலியல் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்' என்று தெரிவித்தனர். கேரள மாணவி அளித்த புகாரில் தன்னுடன் படித்த 5 மாணவிகள் பற்றியும், அவர்களிடம் விசாரித்தால் பேராசிரியர் பற்றி பல்வேறு தகவல்கள் மேலும் தெரியவரும் என்றும் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மகளிர் ஆணையம், கலாஷேத்ரா இயக்குநர் ரேவதியிடம் விசாரணை நடத்தியது. விசாரணை வெறும் மேலோட்டமாகவே இருக்கிறது. இதில் தாமதத்திற்கு இடமின்றி சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டும்! சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி, கோவை சின்மயா போன்ற பள்ளிகளிலும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. நடவடிக்கை எந்த அளவில் எடுக்கப்பட்டது என்பது யாருக்கோ வெளிச்சம்! குற்றச்செயல்களில் கூட வர்ணாசிரமக் கண்ணோட் டம் கூடாது. மாணவிகள் அச்சமின்றிக் கல்விக் கூடங்களுக்கு வரும் நிலை உறுதி செய்யப்படவேண்டும். இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications