தமிழகத்தில் மேலும் ஒரு இளைஞருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதித்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    அடிக்காமல் அரவணைக்கும் காவலர்கள் | police officers awareness on Tamilnadu due to current crisis

    இன்று பகலில் 3 பேருக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் ஒருவர் 42 வயதானவர். கும்பகோணத்தைச் சேர்ந்த அவர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று ஊர் திரும்பிய நிலையில், அவருக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டது.

    Tamilnadu has 2 more corona virus cases

    மற்றொருவர், 49 வயதானவர். காட்பாடியில் சேர்ந்த அவர் ஒரு பாதிரியார். வேலூரிலுள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுவிட்டு, மத்திய கிழக்கு நாடுகள் வழியே, காட்பாடி திரும்பியுள்ளார். இந்தத் தகவல்களை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தனது டிவிட்டரில் உறுதிப்படுத்தியிருந்தார்.

    இன்னொருவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர். அவர் வெளிநாட்டுக்குப் போய் வந்தவரா என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது சென்னையில் ஒரு இளைஞருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் இவர். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு வயது 25. இந்த இளைஞர் வெளிநாடு ஏதேனும் போய் வந்தவரா என்பது தெரியவில்லை. அதுகுறித்து அமைச்சரின் டிவீட்டிலும் தகவல் இல்லை. இதனால் இது கம்யூனிட்டி ஸ்பிரெட்டா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    சென்னையில் மட்டும் ஏற்கனவே 24,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படு வருகிறார்கள். இதில், ரத்த மாதிரிகள் சோதனைக்கு பிறகுதான், அவர்களுக்கு பிரச்சினை இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+