தமிழகத்தில் அரசியல் தலைவருக்கான வெற்றிடம் நிலவுகிறது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி!

தமிழகத்தில் பெரிய அரசியல் தலைவருக்கான வெற்றிடம் நிலவிவருவதாக நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழகத்தில் அரசியல் தலைவருக்கான வெற்றிடம் நிலவுகிறது - ரஜினிகாந்த்

    சென்னை: தமிழகத்தில் பெரிய அரசியல் தலைவருக்கான வெற்றிடம் நிலவிவருவதாக நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.

    2.0 பட வெளியாகி ஓடி வருகிறது. 2.0 படம் இந்தியா முழுக்க நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதேபோல் நடிகர் ரஜினி தனது அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை இந்த மாதம் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    டிசம்பர் 12ம் தேதி அவரது பிறந்த நாளில் இந்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பார்வை குறித்து இந்தியா டுடே நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    அரசியல் பணி

    அரசியல் பணி

    அவர் தனது பேட்டியில், நான் எப்போதும் அரசியலையும், சினிமாவையும் இணைத்து பார்க்க நினைத்ததில்லை. தொடக்கத்தில் இருந்தே இரண்டையும் தூரத்திலேயே வைத்து இருந்தேன். அரசியல் வேறு, சினிமா வேறு. சினிமா என்பது பொழுதுபோக்கிற்கு மட்டுமே.

    எம்ஜிஆர் சிறந்தவர்

    எம்ஜிஆர் சிறந்தவர்

    எம்ஜிஆர் மிகச்சிறந்த அரசியல்வாதி. சினிமா நடிகர் அரசியலில் வெற்றிபெற்று மக்களுக்கு உதவ முடியும் என்பதை எம்ஜிஆர்தான் நிரூபித்துக் காட்டியது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் எல்லோருக்கும் அவர்தான் ரோல் மாடல். எனக்கும் அவர்தான் ரோல்மாடல். அதேபோல்தான் ஜெயலலிதாவும். அவர் மிகவும் வலுவான பெண்.

    கமல் எப்படி

    கமல் எப்படி

    கமலுக்கும் எனக்கும் எந்த சண்டையும் இல்லை. ஏன் எனக்கும் அவருக்கும் போட்டி கூட இல்லை. அவர் ஒரு நல்ல நண்பர். அவர் எனக்கு நிறைய இடங்களில் உதவி இருக்கிறார். அவர் இப்போதும் எனக்கு நெருங்கிய நண்பர்தான். அவர் நாட்டிற்கு நல்லது செய்ய நினைக்கிறார். அவர் தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார்.

    மோடி எப்படி

    மோடி எப்படி

    மோடி இந்த நாட்டிற்கு நல்லது செய்ய நினைக்கிறார். அவரின் நோக்கம் நல்லது. அவர் அதற்காகத்தான் பாடுபடுகிறார். அவ்வளவுதான் இப்போது சொல்ல முடியும்.

    தமிழ்நாடு இல்லை

    தமிழ்நாடு இல்லை

    தமிழ்நாட்டில் தற்போது நல்ல தலைமை இல்லை. பெரிய அரசியல் வெற்றிடம் நிலவுகிறது. அதுதான் இப்போது முக்கியம். மக்களுக்கு அரசியல் அறிவை அளிக்க வேண்டும். மக்களிடம் ஓட்டு கேட்பதை விட, அறிவை அளிப்பதே முக்கியம். மக்கள் கடினமாக உழைக்கிறார்கள், அவர்களுக்கு நாம் கைம்மாறு செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+