Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களின் சொத்துகள், கடன்கள் குறித்த விவரங்களை வெளியிட முடியாது! தமிழக தகவல் ஆணையம் கறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு ஊழியர்களின் சொத்துக்கள், கடன்கள் குறித்த விவரங்களை பொது நலன் இல்லாமல், தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியிட முடியாது என தமிழக தகவல் ஆணையம் அறிவித்துள்ளது.

கிருஷ்ணகிரியில் நீர்த்தேக்க திட்ட உதவி பொறியாளராக பணியாற்ற காளிப்பிரியனின் சொத்து, கடன், வருமான வரி விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திம்மபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கோரியிருந்தார்.

tamil nadu government

மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் பிரியக்குமார், விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். காளிப்பிரியன் ஊழல் செய்திருந்ததாக கருதினால் உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம் என்றும் மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சீனிவாசன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8ஆவது பிரிவின் கீழ் அரசு ஊழியர்களின் சில தனிப்பட்ட விவரங்களை வழங்க விலக்களிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசு ஊழியர்களின் அரசுப் பணி சார்ந்த விவரங்களையும் சொத்து, கடன் விவரங்களையும் வழங்க எந்த தடையும் இல்லை. அரது ஊழியர்களின் இது போன்ற தகவல்களை வழங்க மறுப்பது சட்டவிரோதமானது என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, பொதுவாக அரசு ஊழியர்களின் பணியை பாதிக்கும் வகையிலான தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட முடியாது. அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்து விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என மறுக்க முடியாது.

அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்து விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்பதால் அவற்றில் ரகசியம் காக்க முடியாது. ஒரு வேளை மறுக்கப்பட்டாலும் அதற்கான காரணத்தை தெளிவாக கூற வேண்டும்.

எனவே இந்த தகவல்களை வழங்க முடியாது என மாநில தகவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பாக மனுதாரர் கடந்தாண்டு அளித்த மனுவை மாநில தகவல் ஆணையம் மீண்டும் சட்டப்படி பரிசீலனை செய்து 2 மாதங்களில் தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது அரசு ஊழியர்களின் சொத்துக்கள், கடன்கள் குறித்த விவரங்களை வெளியிட முடியாது என மாநில தகவல் ஆணையம் அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+