உகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்!
சென்னை: சர்வதேச பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் இந்த வாரம் உகாண்டா நாட்டிற்கு செல்கிறார்.
கிழக்கு மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டாவில் சர்வதேச அளவிலான பேரவைத் தலைவர்கள் மாநாடு இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் உலக நாடுகளில் இருந்து பேரவைத் தலைவர்கள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர்.

அந்த மாநாட்டில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபாலும் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் வரும் 25-ம் தேதி புதன்கிழமை உகாண்டா நாட்டிற்கு புறப்பட்டுச் செல்கிறார். அவருடன் சட்டப்பேரவை அலுவலக உயர் அதிகாரிகள் குழுவும் செல்கிறது. இந்த மாநாட்டில் என்ன தலைப்பின் கீழ் தனபால் உரை நிகழ்த்தப்போகிறார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

சட்டப்பேரவை விவகாரங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், உறுப்பினர்களை கையாளும் முறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் இந்த மாநாட்டின் கருவாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் பேரவைத் தலைவர்கள் கலந்துகொள்கின்றன.
உத்திரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தலைவர் ஹிருதய நாராயணன் தீக்ஷித்தும் சர்வதேச பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள பேரவைத் தலைவர்களை நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா வழிநடத்தி அழைத்துச்செல்கிறார்.


Click it and Unblock the Notifications
