திக்திக் நிமிடம்! கடைசி நேரத்தில் ட்விஸ்ட்! கடலூரை தூக்கிய திமுக சுந்தரி.. மேயர் தேர்தலில் பரபரப்பு
சென்னை: கடலூர் மேயர் தேர்தலில் திமுகவின் சுந்தரி வெற்றி பெற்று இருக்கிறார். இவர் வெற்றிபெறுவதே கடைசி நொடி வரை சந்தேகமாக இருந்த நிலையில் சுந்தரி கடைசி நொடியில் வெற்றிபெற்றார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் தற்போது மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. 21 மாநகராட்சிகளில் அனைத்தையும் திமுக கூட்டணி இந்த முறை கைப்பற்றி உள்ளது.
இதில் கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியின் சரவணன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மற்ற 20 மாநகராட்சிகளில் திமுக சார்பாக வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு மேயர்கள் ஆகியுள்ளனர்.

திமுக
திமுகவின் மற்ற கூட்டணி கட்சிகள் எதற்கும் மேயர் பதவிகள் வழங்கப்படவில்லை. இந்த 20 மாநகராட்சிகளில் கடலூரில் மட்டும் மேயரை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவி வந்தது. அங்கு கடைசி நொடி வரை யார் மேயராக போகிறார்கள் என்றே தெரியாத நிலை நிலவி வந்தது. கடலூர் மாநகராட்சியில் 43 இடங்கள் உள்ளன. இதில் 34 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. திமுக நேரடியாக 27 இடங்களை கைப்பற்றியது.

கடல்சூர்
2 சுயேட்சைகள் திமுகவிற்கு ஆதரவாக மாறினர். இதனால் 36 என்று பலத்தோடு திமுக வெற்றிபெறும் என்றே கருதப்பட்டது. இதையடுத்து கடலூர் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக சுந்தரி ராஜா அறிவிக்கப்பட்டார். அமைச்சர் எம்.ஆர்.கே.வின் நேரடி ஆதரவாளர் இவர். நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரி. இவர் எளிதாக வெற்றிபெற வேண்டிய நிலையில்தான் கீதா போட்டிக்கு வந்தார். மாவட்டப் பொருளாளரான வி.எஸ்.எல்.குணசேகரன் தனது மனைவி கீதா இங்கே மேயராக வேண்டும் என்று விருப்பப்பட்டார்.

ரிசார்ட்
இவருக்கு தலைமை வாய்ப்பு வழங்கவில்லை என்றாலும் மேயர் பதவி மறைமுக தேர்தலுக்கு மனுதாக்கல் செய்தார். அதாவது திமுகவை எதிர்த்து இவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதோடு இவருக்கு ஆதரவான திமுக கவுன்சிலர்கள் 20க்கும் மேற்பட்டோர் பாண்டிச்சேரிக்கு புறப்பட்டனர். சுந்தரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வி.எஸ்.எல்.குணசேகரன் அழைப்பின் பெயரில் இவர்கள் எல்லோரும் பாண்டிச்சேரியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

கடலூர் வந்தனர்
இன்று காலைதான் இவர்கள் வாக்களிப்பதற்காக கடலூர் அழைத்து வரப்பட்டனர். இதனால் இவர்கள் எல்லோரும் கீதாவிற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றே கருதப்பட்டது. ஆனால் இன்று வாக்கெடுப்பில் அதிமுக கவுன்சிலர்கள் 6 பேர் புறக்கணித்தனர். அதேபோல் திமுக கவுன்சிலர்கள் சிலர் உட்பட மொத்தம் 13 பேர் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். மீதம் உள்ளவர்கள் மொத்தமாக சுந்தரிக்கு வாக்களித்தனர். இந்த கடைசி நேர ட்விஸ்ட் காரணமாக போட்டி வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார் திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுந்தரி.

வெற்றி சுந்தரி
சுந்தரி அமைச்சர் எம்.ஆர்.கே.வின் நேரடி ஆதரவாளர் இவர். இவரை கீதா கடுமையாக எதிர்த்து வந்தார். ரிசாட்டில் தங்க வைக்கும் அளவிற்கு நிலைமை கைமீறி போனது. ஆனாலும் இங்கு கடைசியில் சுந்தரியே வெற்றிபெற்றுள்ளார். தேர்தல் முடிந்த நிலையில் தலைமையின் உத்தரவிற்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications