சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் திமுக மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகிய இரண்டு பதவிகளுக்குமான தேர்தலில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும்தான் தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை முழுமையான முடிவுகள் தெரிய வரும்.
தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக காலியாக இருந்த ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 91,975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் 2.30 லட்சம் வாக்காளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ஆகிய இரண்டு முக்கிய பதவிகளிலும் திமுக கட்சிதான் முன்னிலை வகித்து வருகிறது.
Jan 18, 2020, 10:06 am IST
மாவட்ட கவுன்சிலர்கள் -12: அதிமுக-6; திமுக-1; இதர 3
Jan 18, 2020, 10:06 am IST
ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் இடதுசாரிகளை வீழ்த்திய பாஜக
Jan 18, 2020, 10:05 am IST
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்: 14 மாவட்ட கவுன்சில்களில் திமுக; அதிமுகவுக்கு 13
Jan 03, 2020, 4:02 pm IST
கன்னியாகுமரியில் 31 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுடன் பாஜக முதலிடம்!
Jan 03, 2020, 3:43 pm IST
கொ.ம.தே.கவுக்கு 4 மாவட்ட கவுன்சிலர்கள்..10 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்
Jan 03, 2020, 3:28 pm IST
சேலம் மாவட்டத்தில் 39 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியது பாமக
Jan 03, 2020, 3:01 pm IST
தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி - மு.க.ஸ்டாலின்
Jan 03, 2020, 3:00 pm IST
நாகை
ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் இடதுசாரிகளை வீழ்த்திய பாஜக
மாவட்ட கவுன்சிலர்கள் -23: அதிமுக-6; திமுக-11; சிபிஐ-3; இதர-1
Jan 03, 2020, 12:19 pm IST
கரூர்:
மாவட்ட கவுன்சிலர்கள் -12: அதிமுக-5; திமுக-1 ....
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்-115 அதிமுக- 66; தேமுதிக-17; பாஜக-3 திமுக-33; காங்.-3. சிபிஎம்-1; இதர-9
Jan 03, 2020, 12:17 pm IST
கடலூர்
மாவட்ட கவுன்சிலர்கள் -29:
அதிமுக-11; தேமுதிக-1 திமுக-11; இதர 3...
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்-287:
அதிமுக- 109; தேமுதிக-17; பாஜக-2 திமுக-82; காங்.-2 இதர- 75
Jan 03, 2020, 12:16 pm IST
அரியலூர்
மாவட்ட கவுன்சிலர்கள் -12: அதிமுக-6; திமுக-1; இதர 3
Jan 03, 2020, 12:15 pm IST
அரியலூர்
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்-113: அதிமுக- 35; தேமுதிக-4; திமுக-41; காங்.-2 இதர- 31
Jan 03, 2020, 12:11 pm IST
நீலகிரி, கன்னியாகுமரி உட்பட 22 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு
Jan 03, 2020, 11:01 am IST
தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் 14-ல் திமுக; 13-ல் அதிமுக வெற்றி
Jan 03, 2020, 10:05 am IST
2011-ல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 29-ல் வென்ற பாஜக தற்போது இதுவரை 48 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
Jan 03, 2020, 9:50 am IST
ஈரோடு மாவட்டத்தை கைப்பற்றியது அதிமுக
Jan 03, 2020, 9:49 am IST
உள்ளாட்சி தேர்தலில் பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்தது தேமுதிக.
81 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியது தேமுதிக.
Jan 03, 2020, 9:44 am IST
அரியலூர் மாவட்டத்தை கைப்பற்றியது அதிமுக.
அரியலூர் 12 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 11-ல் அதிமுக வெற்றி.
அரியலூரில் 41 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் அதிமுக வெற்றி.
Jan 03, 2020, 9:30 am IST
பெரம்பலூர் ஆதனூர் ஊராட்சித் தலைவர் தேர்தலில் வென்ற மணிவேல்(வயது 72) காலமானார்
Jan 03, 2020, 8:46 am IST
உள்ளாட்சி தேர்தல்: 9 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது
Jan 03, 2020, 8:29 am IST
திருமங்கலத்தில் திமுகவின் வெற்றியை அறிவிக்க கோரி 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
Jan 03, 2020, 8:29 am IST
ஸ்ரீவில்லிப்புத்தூரில் திமுக பாலச்சந்திரனின் வெற்றியை அதிகாரிகள் அறிவிக்கவில்லை என்று புகார்
Jan 03, 2020, 8:28 am IST
பூண்டி ஒன்றியத்தில் இரண்டு வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் புகார்
READ MORE
7:11 AM, 2 Jan
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது
7:12 AM, 2 Jan
மொத்தம் 91 ஆயிரம் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் 2.30 லட்சம் வாக்காளர்கள் போட்டி
7:12 AM, 2 Jan
ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு தனித்தனியாக வாக்குகளை பிரிப்பர்
7:13 AM, 2 Jan
ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கும் வாக்குகள் தனித்தனியாக பிரிக்கப்படும்
7:13 AM, 2 Jan
மொத்தம் 8 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது
7:13 AM, 2 Jan
இதன் முடிவுகள் ஓரளவுக்கு தெரிய வரவே இரவு 8 மணி ஆகும் என தெரிகிறது
7:13 AM, 2 Jan
முதல் கட்டமாக நடந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகின
7:13 AM, 2 Jan
இரண்டாம் கட்டமாக நடந்த தேர்தலில் 77 சதவீதம் வாக்குகள் பதிவாகின
7:33 AM, 2 Jan
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் காலை 7 மணிக்கு கொண்டு செல்லப்பட்டன
7:40 AM, 2 Jan
ஊரக உள்ளாட்சி தேர்தல்: தமிழகம் முழுக்க பாதுகாப்பு அதிகரிப்பு
7:40 AM, 2 Jan
பாதுகாப்பு பணியில் 30 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
7:41 AM, 2 Jan
வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
8:02 AM, 2 Jan
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
8:02 AM, 2 Jan
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
8:09 AM, 2 Jan
திருவண்ணாமலையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டியை வெளியே கொண்டு வந்ததால் பரபரப்பு
8:19 AM, 2 Jan
முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன
8:42 AM, 2 Jan
புதுக்கோட்டை, கமுதியில் அதிகாரிகளுக்கான பணி ஒதுக்கீடு குழப்பம்- வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை
8:42 AM, 2 Jan
ஆரணியில் அதிகாரிகளுக்கான அறை ஒதுக்கீட்டில் குளறுபடியால் தாமதம்
8:42 AM, 2 Jan
கமுதியில் வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள அறைகள் இன்னமும் திறக்கப்படவில்லை
8:42 AM, 2 Jan
புதுகையில் வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள் பணி ஒதுக்கீட்டில் குழப்பம்
8:42 AM, 2 Jan
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலும் இதுவரை வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை
8:43 AM, 2 Jan
புதுக்கோட்டை, ராமநாதபுரம் கமுதி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை அறை திறக்கப்படாமல் உள்ளது
8:43 AM, 2 Jan
பழனி, ஆரணி, திருத்துறை பூண்டியில் வாக்கு எண்ணிக்கை தாமதம்
8:47 AM, 2 Jan
திருவள்ளூர் ஆர் கே பேட்டை ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிமுக -திமுகவிடையே வாக்கு வாதம்
8:47 AM, 2 Jan
திருவள்ளூரிலும் இன்னும் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கவில்லை
8:47 AM, 2 Jan
திருத்துறைப்பூண்டியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை
8:47 AM, 2 Jan
நாகை மாவட்டம் கீழையூரில் தபால் வாக்குகளை எண்ணுவதில் குளறுபடியால் தாமதம்
8:47 AM, 2 Jan
பழனியில் அரசியல் ஏஜென்ட் யாரும் வராததால் வாக்கு எண்ணும் பணிகள் தாமதம்
8:52 AM, 2 Jan
ஏற்காடு, ஆரணி ஒன்றியங்களில் தபால் வாக்குகள் பதிவாகவில்லை
9:20 AM, 2 Jan
திண்டுக்கல் மையத்தில் குழப்பம்- வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்