ஆளும் கட்சி மீது மக்கள் பெரும் வெறுப்பில் உள்ளனர்.. எல்லோருக்கும் மிக்க நன்றி.. ஸ்டாலின் நெகிழ்ச்சி
ஆளும் கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஆளும் கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது, மக்களுக்கு மிக்க நன்றி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் முடிவுக்குள் வெளிவர தொடங்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிபெற்று விட்டது. தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் 14-ல் திமுக; 13-ல் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 5090 இடங்களில் திமுக 2330, அதிமுக 2165, மற்றவை - 509 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இன்னொரு பக்கம் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 515 இடங்களில் திமுக 263, அதிமுக 240, மற்றவை - 1 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இரண்டிலும் திமுக 50%+ இடங்களை வென்றுள்ளது.

ஸ்டாலின் என்ன சொன்னார்
ஸ்டாலின் தனது அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்றுள்ள மகத்தான வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. எத்தகைய அராஜகத்தையும், அடாவடிகளையும் மீறி வெற்றி பெறும் வல்லமை மக்கள் சக்திக்கு உண்டு. மக்கள் தங்களின் சக்தியை நிரூபித்து விட்டார்கள்.

தமிழக வாக்காளர்கள்
தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. ஆளும் கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு இதன் மூலம் தெரிய வந்துள்ளது.ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

மாநில தேர்தல் ஆணையம்
இந்த தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் மிகவும் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டது.ஆனால் அதையும் மீறி திமுக கூட்டணி வென்றுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியின் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறைகளை மீறி தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக அரசு
அதிமுக அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை வளைக்க நினைத்தது.நிறைய எதிர்மறையான விஷயங்களை அதிமுக அரசு செய்தது. ஆனால் மக்கள் அவர்களை மதிக்கவில்லை. பெரும்பான்மை வெற்றியை திமுக கூட்டணிக்கு கொடுத்திருக்கும் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி, என்று கூறியுள்ளார்.
-
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications