Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நகர்ப்புற உள்ளாட்சி மறைமுக தேர்தல்.. சென்னை, கோவை உட்பட 21 மாநகர மேயர்கள் பதவி ஏற்பு.. முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி மறைமுக தேர்தல் நடைபெற்றது. கோவை, சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 21 மாநகராட்சி மேயர்கள், துணை மேயர் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர்.

Recommended Video

    தேசிய அரசியலில் முதல்வர் Stalin? அச்சாரம் போட்ட அண்ணா அறிவாலயம்

    21 மேயர் இடங்களில் மொத்தம் 20 இடங்களில் திமுகதான் மேயர் பதவிகளை பிடித்துள்ளது. கும்பகோணத்தில் மட்டும் காங்கிரஸ் மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வென்றவர்கள் நேற்று முதல்நாள் பதவி ஏற்ற நிலையில் இன்று மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. வார்டு உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் மேயர், துணை மேயர்கள், நகர மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

    இன்று காலை 9.30 மணிக்கு இதற்காக மன்ற கூட்டம் தொடங்கியது. இன்று மறைமுக தேர்தல் நடக்கும் நிலையில் எந்த மாநகராட்சியில் யார் மேயராக பதவி ஏற்றார் என்று பார்க்கலாம்.

    கட்சி ரீதியாக ஒதுக்கீடு

    கட்சி ரீதியாக ஒதுக்கீடு

    திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு கும்பகோணம் மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் சேலம், காஞ்சிபுரம் துணை மேயர் பதவிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி தலைவர் பதவிகள், 9 நகராட்சி துணை தலைவர் பதவிகள் காங்.க்கு வழங்கி உள்ளது திமுக. திமுக அணியில் 8 பேரூராட்சி தலைவர் பதவிகள், 11 பேரூராட்சி துணை தலைவர் பதவிகள் காங்.க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மதிமுக

    மதிமுக

    மதுரை துணை மேயர் பதவி சி.பி.எம். கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 நகராட்சி தலைவர், 3 நகராட்சி து.தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 6 பேரூராட்சி து.தலைவர் பதவிகள் சி.பி.எம்.க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆவடி துணை மேயர் பதவி மதிமுகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 1 நகராட்சி தலைவர் பதவி, 3 நகராட்சி துணைத் தலைவர் பதவி, 3 பேரூராட்சி தலைவர் பதவிகள் மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை துணை மேயர் பதவி சி.பி.எம். கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 நகராட்சி தலைவர், 3 நகராட்சி து.தலைவர், 3 பேரூராட்சி தலைவர், 6 பேரூராட்சி து.தலைவர் பதவிகள் சி.பி.எம்.க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆவடி துணை மேயர் பதவி மதிமுகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 1 நகராட்சி தலைவர் பதவி, 3 நகராட்சி துணைத் தலைவர் பதவி, 3 பேரூராட்சி தலைவர் பதவிகள் மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    விசிக

    விசிக

    3 பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகள் மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வி.சி.க.வுக்கு கடலூர் துணை மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 2 நகராட்சி தலைவர் பதவிகள், 3 நகராட்சி துணை தலைவர் பதவி, 3 பேரூராட்சி தலைவர் பதவிகள் விசிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 7 பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகள் விசிகவுக்கு ஒதுக்கியது திமுக. ஆனால் பல பேரூராட்சி, நகராட்சிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் கடைசியில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.

    மேயர்கள் யார்?

    மேயர்கள் யார்?

    இன்று மேயர், துணை மேயர்களாக பதவி ஏற்றவர்களின் முழுமையான பட்டியல்:

    சென்னை மாநகராட்சி மேயர் - ஆர். பிரியா; துணை மேயர் - மகேஷ் குமார்

    மதுரை மாநகராட்சி மேயர் - இந்திராணி

    திருச்சி மாநகராட்சி மேயர் - மு. அன்பழகன்; துணை மேயர் - திவ்யா தனக்கோடி

    நெல்லை மாநகராட்சி மேயர் - பி.எம்.சரவணன்; துணை மேயர் - கே.ஆர்.ராஜூ

    தூத்துக்குடி

    தூத்துக்குடி

    சிவகாசி மாநகராட்சி மேயர் - சங்கீதா இன்பம்; துணை மேயர் - விக்னேஷ் பிரியா

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் - மகேஷ் துணை மேயர் - மேரி பிரின்சி

    தூத்துக்குடி மாநகராட்சி மேயர் - என்.பி.ஜெகன்; துணை மேயர் - ஜெனிட்டா செல்வராஜ்

    ஆவடி மாநகராட்சி மேயர் - ஜி. உதயகுமார்;

    தாம்பரம் மாநகராட்சி மேயர் - வசந்தகுமாரி தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் - ஜி. காமராஜ்

    காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் - மகாலட்சுமி யுவராஜ்

    தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் - சண். இராமநாதன்; தஞ்சாவூர் துணை மேயர் - அஞ்சுகம் பூபதி;

     கடலூர் மேயர்

    கடலூர் மேயர்

    கரூர் மாநகராட்சி மேயர் - கவிதா கணேசன்; துணை மேயர் - தாரணி

    ஒசூர் மாநகராட்சி மேயர் - எஸ்.ஏ.சத்யா; துணை மேயர் - சி.ஆனந்தைய்யா

    திண்டுக்கல் மாநகராட்சி மேயர் - இளமதி; துணை மேயர் - இராஜப்பா

    வேலூர் மாநகராட்சி மேயர் - சுஜாதா அனந்தகுமார்; துணை மேயர் - சுனில்

    கடலூர் மாநகராட்சி மேயர் - சுந்தரி;

    கும்பகோணம் காங்கிரஸ்

    கும்பகோணம் காங்கிரஸ்

    கோவை மாநகராட்சி மேயர் - கல்பனா; துணை மேயர் - வெற்றிச்செல்வன்

    சேலம் மாநகராட்சி மேயர் - ஏ. இராமச்சந்திரன் திருப்பூர் மாநகராட்சி மேயர் - தினேஷ் குமார்

    ஈரோடு மாநகராட்சி மேயர் - நாகரத்தினம்; துணை மேயர் - செல்வராஜ்

    கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர்- தமிழழகன். இங்கு மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் கே.சரவணன் மேயராக போட்டியிடுகிறார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+