தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி மறைமுக தேர்தல்.. இன்று தேர்வு செய்யப்படும் மேயர், துணை மேயர்கள்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மேயர், துணை மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.
Recommended Video
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வென்றவர்கள் நேற்று முதல்நாள் பதவி ஏற்ற நிலையில் இன்று மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. வார்டு உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் மேயர், துணை மேயர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 22ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளி வந்தன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணிதான் கைப்பற்றி உள்ளது.

திமுக vs அதிமுக
அதேபோல் நகராட்சி வார்டுகள், பேரூராட்சி வார்டுகளிலும் திமுகதான் பெரும்பான்மை பெற்றுள்ளது. 952 மாநகராட்சி வார்டுகளை திமுக வென்றுள்ளது. 2360 நகராட்சி வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளது. அதேபோல் 4388 பேரூராட்சி வார்டுகளை திமுக மொத்தமாக கைப்பற்றி வென்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 164 மாநகராட்சி வார்டுகளை வென்றுள்ளது. 638 நகராட்சி வார்டுகளை வென்றுள்ளது. 1206 பேரூராட்சி வார்டுகளை அதிமுக இந்த தேர்தலில் வென்றுள்ளது.

பதவி ஏற்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் இதில் வெற்றிபெற்றவர்கள் நேற்று முதல்நாள் பதவி ஏற்றனர். இந்த நிலையில் இன்று காலை மறைமுக தேர்தல் நடக்க உள்ளது. இன்று தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு சில வார்டுகளில் பல்வேறு காரணங்களுக்காக தேர்தல் நடக்கவில்லை. இந்த தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மன்றத்தில் நடக்கும் மறைமுக தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.

நகராட்சி
21 மாநகராட்சியையும் திமுக கைப்பற்றியுள்ளது. இதில் 20 மாநகராட்சி மேயர் வேட்பாளர்களின் பெயர்களை நேற்று திமுக வெளியிட்டது. கும்பகோணம் மாநகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் பெரும்பலமான் இடங்களில் திமுக கூட்டணியே பெரும்பான்மை பெற்றுள்ளதால் அதனால் அதிக அளவிலான நகராட்சி, பேரூராட்சி பதவிகளை திமுகவே பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக, திமுக கூட்டணி தவிர்த்து வேறு எந்த கட்சிகளும் நகராட்சி, பேரூராட்சி பதவிகளை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை கூட்டம்
மறைமுக தேர்தலுக்கான மாநகர, நகர மற்றும் பேரூராட்சி மன்ற கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இன்று போட்டியிடும் வேட்பாளர்கள் எதிர்ப்பு இன்றி தேர்வு செய்யப்படவே வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனாலும் சில நகராட்சிகளில் இரண்டு பேர் நகரமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டால் வாக்கெடுப்பு முறையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த முடிவுகள் உடனே அறிவிக்கப்படும். ஆனால் பெரும்பாலும் வேட்பாளர்கள் எதிர்ப்பு இன்றி வெற்றிபெறவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications