தமிழ்நாட்டில் இன்று முதல் ஊரடங்கில் பல தளர்வு.. எந்த மாவட்டங்களில் கட்டுப்பாடு? எதற்கெல்லாம் அனுமதி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ஊரடங்கில் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் 11 மாவட்டங்களில் ஒரு சில அடிப்படை தளர்வுகளும், மற்ற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அமலுக்கு வருகின்றன.

தமிழ்நாட்டில் தற்போது தினசரி கொரோனா கேஸ்கள் வேகமாக குறைய தொடங்கி உள்ளது. தினசரி கொரோனா கேஸ்கள் கடந்த சில நாட்களாக 25 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 20421 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று கொரோனா காரணமாக 434 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 27005 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 2237233 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு

ஊரடங்கு

இந்த நிலையில் தமிழ்நாட்டு ஊரடங்கில் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழு ஊரடங்கு 7-6-2021 முதல் 14-6-2021 காலை 6-00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் சில தளர்வுகளுடனும், மற்ற மாவட்டங்களில் அதிக தளர்வுகளுடனும் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

11 மாவட்டங்கள்

11 மாவட்டங்கள்

தமிழ் நாட்டில் தற்போது கொரோனா நோய்த் தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த மாவட்டங்களில் இன்று முதல் சில அடிப்படை தளர்வுகள் கொண்டு வரப்படும்.

 11 மாவட்டங்களில் உள்ள தளர்வுகள்

11 மாவட்டங்களில் உள்ள தளர்வுகள்

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

*காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

*மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

* இறைச்சிக் கூடங்கள் (Slaughter houses) மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

* அனைத்து அரசு அலுவலகங்களும், 10 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடுதலாக கிழக்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்.

 11 மாவட்டங்கள் தவிர்த்து

11 மாவட்டங்கள் தவிர்த்து

தமிழ்நாட்டில் உள்ள இந்த 11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாநிலங்களில் வரும் தளர்வுகள்

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

* இறைச்சிக் கூடங்கள் (Slaughter houses) மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகிதம் பணியாளார்களுடன் நிலையானவழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்படஅனுமதிக்கப்படும்

* அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்
பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

* மின் பணியாளர் (Electricians) பிளம்பர்கள் (Plumbers) கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 5.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

கடைகள்

கடைகள்


* மின் பொருட்கள் (electrical goods), பல்புகள், கேபின்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். - மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* ஹார்டுவேர் கடைகள் காலை 5.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 5.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்டும். கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 5.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும்.

பொது

பொது

லாக்டவுன் தொடர்பான சில பொது விதிகள், தளர்வுகள் பின்வருமாறு,

*நீலகிரி மாவட்டம், கொடக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.

*கோயம்புத்தூர். திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும், 110 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

*தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு காய்கறி, பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம், பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* பொது மக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குமாறும், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+