"இது வேற ஒட்டிக்கிச்சு".. சட்டசபையில் கொந்தளித்த துரைமுருகன்.. உற்று பார்த்த அப்பாவு.. என்ன நடந்தது?
சென்னை: இன்று மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்த நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவையில் மிகவும் உருக்கமாக பேசினார். அவர் தீர்மானத்தை தாக்கல் செய்யும் முன் சுவாரசியமான சம்பவம் ஒன்றும் நடைபெற்றது.
Recommended Video
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை சட்டசபையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுகன் தனித்தீர்மானத்தை கொண்டு வந்து முன்மொழிந்து பேசினார்.
கர்நாடக அரசுக்கு எதிராக துரைமுருகன் இன்று கணீர் குரலில் மிகவும் உருக்கமான கருத்துக்களை எடுத்து வைத்தார். அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, விசிக என்று எல்லோரும் ஒரு அணியில் நிற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

துரைமுருகன்
துரைமுருகன் தனது பேச்சில், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் எல்லோரும் ஒரே பக்கத்தில் நிற்கிறார்கள். அவர்களுக்கு இடையில் வேறுபாடு இருந்தாலும் காவிரி பிரச்சனையில் ஒன்றாக நிற்கிறார்கள். ஆனால் நாம் அப்படி இல்லை. இங்கே தீர்மானம் கொண்டு வரும் போது அதிமுக கொண்டு வந்தால் அதை திமுக ஆதரிக்கும். திமுக கொண்டு வந்தால் அதை அதிமுக ஆதரிக்கும். அவைக்கு உள்ளே காவிரி விவகாரத்தில் நாம் ஒன்றாக இருக்கிறோம்.

மேகதாது
ஆனால் வெளியே.. சட்டசபைக்கு வெளியே காவிரி விவகாரத்தில் நாம் ஒற்றுமையாக இல்லை. உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன். நாம் இப்போது சண்டை போட கூடாது. நீங்கள் யோக்கியனா, நான் யோக்கியனா என்று சண்டை போட நேரம் இது இல்லை. இந்த காவிரி பிரச்சனையில் நாம் மோதலை விட்டுவிட்டு ஒன்றாக நிற்க வேண்டும். உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சண்டை போட்டவன்
நானும் வாலிப பருவத்தில் அவையில் சண்டை போட்டு இருக்கிறேன். இப்போது எனக்கு வயதாகிவிட்டது. நாம் இப்போது ஒற்றுமையாக இருக்க வேண்டும். நேற்று இரவு இந்த தீர்மானத்தை நான் படித்துக்கொண்டு இருக்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது. கர்நாடக அரசு தொடர்ந்து விதிகளை மீறி வருகிறார்கள். ஏதாவது செய்து தமிழ்நாட்டிற்கு செல்ல வேண்டிய நீரை தடுக்க வேண்டும் என்று அவர்கள் பார்க்கிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்
நமக்கான தண்ணீரை தடுக்க வேண்டும் என்று அடாவடி தனமாக செயல்படுகிறார்கள். சுப்ரீம் கோர்ட் சொன்னதையே மதிக்க மாட்டேன் என்று மாநில அரசு சொன்னால்.. கூட்டாச்சி எங்கே இருக்கிறது. மாநில அரசு உச்ச நீதிமன்றம் சொன்னால் கேட்க வேண்டும். இதை நாம் விட கூடாது. இதில் நாம் தோல்வி அடைந்தால் எதிர்கால சமுதாயம் நம்மை காரி துப்பும். நம்மை சபிக்கும். அதற்காக நாம் போர் தொடுக்க முடியாது. சட்டப்படி கர்நாடக அரசின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும்.

பொம்மை அரசு
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கொஞ்சம் ஓவராக பேச கூடியவர். இருந்தாலும்... அவரின் தந்தை கூட்டாச்சி தத்துவத்தை உறுதிப்படுத்தியவர். அவரின் தந்தை ஜனநாயகத்தை காத்த பெருமகன். மாநில ஆட்சிகளை நினைத்தால் கவிழ்க்கும் நிலையை மாற்றியவர். அவரின் மகன் தந்தை வழியில் இருந்து நேர்மையாக செயல்படுவார் என்று நம்புகிறேன். நாம் அருகருகே இருக்கிறோம். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், என்று துரைமுருகன் தனது உரையில் குறிப்பிட்டார்.

பேப்பர் ஒட்டிக்கொண்டது
இதையடுத்து தீர்மானத்தை தாக்கல் செய்வதற்காக, தீர்மான பத்திரத்தை எடுத்தார். ஆனால் தீர்மான பக்கங்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு இருந்தது. முதல் பக்கத்தையும், இரண்டாவது பக்கத்தையும் எடுக்க முடியாமல் துரைமுருகன் திணறிக்கொண்டு இருந்தார். துரைமுருகன் என்ன செய்கிறார் என்று தெரியாமல் சபாநாயகர் அப்பாவு வியந்து பார்த்துக்கொண்டு இருந்தார். இதையடுத்து துரைமுருகன் .. இது வேற இப்படி ஒட்டிக்குது.. என்ன பண்றதுன்னு தெரியல என்று கூறினார். அதையடுத்து உதவியாளர் ஒருவர் வந்து ஒட்டி இருந்த பக்கங்களை பிரித்து கொடுத்தார். இதையடுத்து துரைமுருகன் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழித்தார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications