"தைரியமா இருங்க.. நாங்க இருக்கோம்!" நீட் உதவி மையத்திற்கு வந்த கால்! டக்கென எடுத்த மா.சு அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வு எழுதிய மாணவிகளுக்கு மனநல ஆலோசனை தரும் பணிகளைத் தமிழக அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவ இடங்கள் நீட் தேர்வு மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றைய தினம் நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது.

பல்வேறு மாணவ- மாணவிகளும் நீட் தேர்வை ஆர்வத்துடன் எழுதினர். விண்ணப்பித்தவர்களில் சுமார் 95% பேர் தேர்வு எழுதியதாகத் தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

 அமைச்சர் மா.சு

அமைச்சர் மா.சு


சென்னை தேனாம்பேட்டை டி. எம்.எஸ். வளாகத்தில் உள்ள 104 மருத்துவ சேவை மையத்தை மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். முதலுதவி பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம், ப்ளூ கிராஸ் குறித்த தகவல்களை 104 உதவி எண்ணில் தெரிந்து கொள்ளலாம். மனநல ஆலோசகர்களைக் கொண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், அதையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

 தைரியமா இருங்க

தைரியமா இருங்க

அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்து கொண்டு இருந்த போது, அங்கு வந்த அழைப்பை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எடுத்துப் பேசினார். மறுமுனையில் நீர் தேர்வு எழுதிய மாணவர் ஒருவர் பேசினார். தைரியமாக இருங்கள், நல்ல ரிசல்ட் வரும் என்று கூறிய அமைச்சர் மா.சு, இந்த ஆண்டும் மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

 விரைவில் நீட் விலக்கு

விரைவில் நீட் விலக்கு

மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்த மாணவரிடம் கூறினார். அதைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "நீட் எழுதிய மாணவர்களுக்கு உதவும் வகையில் முதல்வரின் ஆலோசனைப்படி இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

 ஆலோசனை

ஆலோசனை

நீட் தேர்வு எழுதிய அனைவருக்கும் தேவையான ஆலோசனை வழங்கப்படும். நீட் தேர்வு எழுதிய 17,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெரும் மாணவர்களின் பட்டியல் பெறப்பட்டு ஆலோசனை தொடங்கி உள்ளோம். தமிழக அரசின் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு மட்டும் 555 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்விக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் 7.55% இட ஒதுக்கீடு தொடரும்.

Recommended Video

    எங்கே இருக்கிறது NEET விலக்கு மசோதா? | DMK | AIADMK | Politics
     முயற்சி தொடரும்

    முயற்சி தொடரும்

    இது ஒருபுறம் இருந்தாலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீட் விலக்கு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. அதேபோல ஹாப்பீ ஸ்டீரீட் இடங்களில் மருத்துவ முகாம்கள் அமல்படுத்துவது குறித்தும் சென்னை மேயரை ஆய்வு செய்யக் கேட்டுக் கொண்டு உள்ளோம்" என்று அமைச்சர் மா.சு தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+