Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ரொம்ப சிறப்பாக செயல்படுகிறார்.. உதயநிதியை துணை முதல்வராக்குங்கள்!" சொல்கிறார் எஸ்.எஸ்.சிவசங்கர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் எனச் சொல்லப்படும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட மேற்கு கூவம் சாலை வழியாக புதிய பேருந்து வழி தடத் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த புதிய வழித் தடத்தைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

 அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர்

அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர்

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், "சென்னையில் பள்ளி மாணவர்கள் பயணிக்க போதுமான பேருந்துகள் இல்லாத பகுதிகளைப் பள்ளிக் கல்வித் துறையின் உதவியுடன் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்துகள் குறைவாக இயக்கப்படும் பகுதிகளைக் கண்டறிந்து, அப்பகுதியில் போதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இரவு நேரத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படாத இடங்களைக் கண்டறிந்து பழையபடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

 உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

தொடர்ந்து பேசிய எஸ்.எஸ் சிவசங்கர், "சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பான கோரிக்கைக்கு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மிகச்சிறந்த சட்டசபை உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார். அவர் செய்யும் பணியை மக்கள் பாராட்டி வருகின்றனர்,

 துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டால் அவர் மிகச் சிறப்பாகச் செயல்படுவார். உதயநிதி ஸ்டாலினை உடனடியாக அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கையை நானும் முன் வைக்கிறேன். இது மட்டுமின்றி உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். இதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

உதயநிதி

உதயநிதி

கடந்த 2021இல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றார். அப்போதே உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை.

 அமைச்சரவை மாற்றம்

அமைச்சரவை மாற்றம்

இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாகவே உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று பல்வேறு அமைச்சர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்க வேண்டும் என்று எஸ்.எஸ். சிவசங்கர் கூறியது மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+