ரொம்ப எதிர்பார்த்தோமே.. இப்படி ஆகிடுச்சே.. கல்வித்துறைக்கு ஆளை மாற்றிய ஸ்டாலின்.. ஏன் என்னாச்சு?
சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில், திமுக அமைச்சரவையின் முதல் கட்ட லிஸ்ட் வெளியாகி உள்ளது. இதில் கல்வித்துறை தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்படவில்லை என்ற செய்தி பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் வென்றுள்ள திமுக கூட்டணி அரசு நாளை ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் நாளை காலை தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். 10 ஆண்டு போராட்டத்திற்கு பின் திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது.
திமுக ஆட்சி அமைக்க உள்ள நிலையில் யாருக்கு எல்லாம் அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாகவும், புதிராகவும் இருந்தது. இது தொடர்பாக நிறைய விவாதங்கள், யூகங்கள் உலவி வந்தன.
பட்டியல்
இந்த நிலையில் தற்போது அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் திமுகவின் மூத்த உறுப்பினர் தங்கம் தென்னரசுக்கு கல்வித்துறை ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திமுகவின் முந்தைய ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு.

முத்திரை
கல்வித்துறை முத்திரை பதித்தவர் தங்கம் தென்னரசு. இவரின் அமைச்சரவையின் கீழ்தான் தமிழகத்தின் துறை புதிய மாற்றங்களை கண்டது. பள்ளிகள் புதுப்பொலிவு பெற்றன. முக்கியமாக அரசு பள்ளிகள் மேம்படுத்தப்பட்டன. பல கிராமங்களில் புதிய பள்ளிகள் கட்டப்பட்டன.

பள்ளிகள்
இந்த நிலையில் திமுகவின் புதிய அமைச்சரவையில் தங்கம் தென்னரசுக்கு பள்ளிக்கல்வித்துறை வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பலருக்கும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இளம் எம்எல்ஏ அன்பில் மகேஷுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்பட்டது. அதேபோல் உயர் கல்வித்துறை பொன் முடிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தங்கம் தென்னரசு
மாறாக திருச்சுழி தொகுதியில் வென்ற தங்கம் தென்னரசுக்கு கல்வித்துறைக்கு பதிலாக தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு தொல்பொருள் துறை, தமிழ் ஆட்சி மொழில், தமிழ் பண்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு அதிர்ச்சியாக இருந்தாலும் தங்கம் தென்னரசுக்கு தொழில்துறையில் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications